Tuesday, July 22, 2025

செக்கு மூலம் எண்ணெய்!


செக்கிழுத்த செம்மல் என்பர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரப்பிள்ளையை விபரிக்கையில். காரணம் அவரது ஆங்கிலேயருக்கு எதிரான வர்த்தக , விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளால் அவரைச் சிறையில் அடைத்தது ஆங்கிலேயரின் ஆதிக்க அரசு. சிறையில் செக்கிழுக்க வைத்தது. அதன் காரணமாகவே அவரைச் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைப்பர். 
 
பலருக்குச் செக்கு என்றால் எப்படியிருக்கும் என்பது தெரியாது, ஆனால் அது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுக்கு இப்பதிவு சிறிது விளக்கத்தைத் தருமென்று நம்புகின்றேன். முதலில் செக்கு பற்றித் 'தகவல் திரட்டி' என்னும் முகநூற் பக்கக்குறிப்பைக் கீழே தருகின்றேன்:
 
"மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ? செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ, கல்லாலோ செய்யபட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது. ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற் பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்க படுகிறது. பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.

செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க) சேர்த்து ஆட்டுவது வழக்கம். சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும். மரசெக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சம்மாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இப்படி மர செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை. இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான்.

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும். ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத் திற்கு கெட்டு போகாமலும் இருக்கும். ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி கால கால காலத் திற்கும் மறக்காது. இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும். குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்."
 

செக்கு என்றவுடன் எனக்கு ஆச்சியின், அம்மம்மாவின், நினைவும் கூடவே வரும். அவர் இருந்தவரையில் நல்லெண்ணெய் வாங்கியது ஆனைக்கோட்டை அல்லது நவாலிப் பகுதியிலிருந்து ,வீட்டில் செக்கு மூலம் நல்லெண்ணெய் தயாரித்து விற்கும் ஒருவரிடமிருந்து தான். உயர்ந்த தோற்றம். வேட்டி கட்டியிருப்பார். மேற் சட்டை போட்டிருக்க மாட்டார். காதில் கடுக்கன். சிரித்த முகம். இப்படித்தான் அவரது தோற்றம் நினைவிலுள்ளது. அவரை அந்திப்பொழுதுகளில் கல்லுண்டாய் வெளியில் விரிந்து கிடக்கும் வெளியில் காண்பதுண்டு. தனது கால்நடைகளை மேயக்கொண்டு வருவார்.
செக்கு மூலம் எண்ணெய் பெறுவதை வெளிப்படுத்தும் இக்காணொளி அதன் செயற்பாட்டை விரிவாகவே எடுத்துக்காட்டும். - https://www.facebook.com/reel/1216387536458218

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்