எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!' (ஓவியம் - AI)
கூறும் பொருள் , பாத்திரப் படைப்பு காரணமாக இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. திட்டமிட்டு, கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை. இந்தியப் பெண்ணுக்கும், வெள்ளையின ஆணுக்கும் , ‘இன் விட்ரோ’ கருத்தரித்தல் (IVF) முறையில் பிறந்த பெண் குழந்தை கிளியோ. மரபு அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிபவன் அக்கணவன். அவனது தந்தை தொல்லியல் அறிஞர்.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - |
கதையின் சாரம் இதுதான்: கிளியோ ஒருவேளை எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் மரபணு மூலம் உருவாக்கப்பட்டவளோ? அக்கணவனின் தந்தை தொல்லியல் அறிஞர் என்பதால், அவரால் அந்த மரபணு சேகரிக்கப்பட்டிருந்ததோ? இவ்விதமான சந்தேகம் நியாயமானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தகுந்த ஆதாரங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. கிளியோவும் சமுதாயப் பிரக்ஞை மிக்க பெண்ணாக உருவாகியிருக்கின்றாள். இயற்கையை அழிக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவள். அதன் காரணமாக அவள் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத்தான் வீட்டைத்துறந்து பறந்தாளோ என்னுன் கேள்வியுடன் கதை முடிகின்றது.
கதையில் ஆங்காங்கே சிந்திக்கத்தூண்டும் பகுதிகளும் கலந்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று;
"அவர்கள் இருவரும் பல விடயங்களை அறியும் ஆவலுடன் பல நாடுகளுக்கு ஒன்றாகச் சென்று பயணித்தார்கள். கல்பனாவின் தாய்நாடான இந்தியாவுக்கு அடிக்கடி சென்றார்கள். கல்பனாவின் தாய் சொல்லிய இதிகாச புராண கதைகளையும் அதில் சொல்லப் பட்டிருக்கும் மாயா ஜாலக் கதைகளையும கேட்டு வளர்ந்தவள் கல்பனா.ஆனால் மார்க் தன் மனைவியுடன் இந்தியா சென்றபோது அக்கதைகளில் பெண்கள் நடத்தப்படும விதங்களையும் அத்துடன் இந்தியக் கடவுளர் பலர் போர் ஆயதங்களுடனிருப்பதையும் விமர்சித்தபோது ‘தமிழர் நாகரிகச் சரித்திரம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆனால் காலக்கிரமத்தில் சமயம் என்ற பெயரில் மனிதமற்ற முறையில் சாதி மத பேதங்கள் உண்டாக்கப் பட்டு இந்திய மக்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரிசமமாகப் பார்க்க முடியாத மாதிரி சமூக அமைப்பை மாற்றி அமைத்திருக்கிறது’ என்ற விளக்கத்தைச் சொன்னாள கல்பனா."
இக்கதையை இயக்குநர் சங்கர் வாசித்தால் , 'எந்திரன்' திரைப்படத்தைப் போல் 'கிளியோபாட்ரா' என்னும் பெயரில் , பிருமாண்டமான, தொழில் நுட்பங்கள் மிளிரும் திரைப்படமொன்றினைத் தயாரிக்ககூடும், அதற்கேற்பக் கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை.
சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.
கிளியோவைத் தத்தெடுத்து வளர்த்த ‘அம்மா’ ஸாரா பல யோசனைகளுடன் கிளியோவின் படுக்கைக்கு அருகில் ஒரு மரக்கட்டை போல விறைப்பாக நிற்கிறாள். ஸாராவால் நகர முடியவில்லை. பய உணர்வு அவளைச் சூழ்ந்திருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. வெளியில் இலையுதிர்காலக் காற்று பலமாகவும் கோபமாகவும் இருக்கிறது. குடிபோதையில் இருக்கும் குண்டன் பலவீனமான பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதைப் போல அது கண்ணாடி ஜன்னலைத் தாக்குகிறது. சூரியன் வெளிச்சம் குறைந்து பரிதாபமாக இருக்கிறான். கிளியோவின் மறைவில் சூரியனும் மகிழ்ச்சியடையவில்லை போலும்.
‘கிளியோ ஒருநாள் நம்மை விட்டுப் போய்விடுவாள் என்று எனக்குத் தெரியுமா?’ ஸாரா தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறாள். கிளியோவின் மனதில் ஏதோ மாற்றங்கள் இருப்பதாக ஸாரா நீண்ட காலமாக அறிந்திருந்தாள். எனவே ஒரு நாள் அவள் அவர்களை விட்டு வெளியேறுவாள் என்று அவளுக்குச் சாடையாகத் தெரியும் என்பதை அவள் ஒட்டு மொத்தமாக மறைக்க முடியாது.
‘கிளியோவைத் தத்தெடுக்கலாமா?’ என்ற கேள்வியை அவள் கணவன் ஒலிவர் தயக்கத்துடன் கேட்ட நேரம் ஸாராவுக்கு இன்றும் நினைவிருக்கிறது. இதே அறையில் சுமார் பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு ஒலிவர் நின்று கொண்டிருந்தான். அவன் பதட்டத்துடன் விரல்களைச் சுரண்டிக் கொண்டிருந்தான் ஒலிவர் ஒரு உயரமான மனிதன். சுமார் ஆறு அடி இரண்டு அங்குலங்கள். ஆனால் அவன் ஒரு பலவீனமான ஆத்மாவைப் போல; ஸாராவின் பதிலுக்காக அன்றுஅங்கேயே நின்றான்.
முழுமையாக வாசிக்க - https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9257-2025-07-28-17-26-09
No comments:
Post a Comment