Friday, September 26, 2025

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ..


அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது சந்தித்தேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைச் செயற்கைத் தொழில் நுட்பம் 'ஸ்கெட்ச்' வடிவில் மாற்றித்தந்தது.

எழுத்தாளர் மாலனுடன் ...


தொண்ணூறுகளில் எழுத்தாளர் மாலன் கனடா வந்திருந்தபோது அவரை எழுத்தாளர் ரதனுடன் சந்தித்தேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைச் செயற்கைத் தொழில் நுட்பத்தின் மூலம் உருமாற்றி விளையாடியதன் விளைவு இது.
 
இடமிருந்து வலமாக - ரதனின் நண்பர், ரதன், மாலன் & நான்.

Thursday, September 25, 2025

Wednesday, September 24, 2025

எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா மறைவு!


இந்திய இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா. அவர் மறைந்த செய்தினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
 
அவரது நாவல்களான 'பருவம்' (மகாபாரதத்தின் மீதான மறுவாசிப்பு) , ஒரு குடும்பம் சிதைகிறது ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. 
 

ஒரு குடும்பத்தின் சிதைவு நாவலைப் பின்வரும் இணையத்தள முகவரியில் வாசிக்கலாம் -https://abedheen.wordpress.com/wp-content/uploads/2012/12/orukudumbamsidhaigirathu.pdf
 
அவரது மறைவினையொட்டி எழுத்தாளர் ஜெயமோகனின் அஞ்சலிக்குறிப்பு சுருக்கமாக அவரது இலக்கியப் பங்களிப்பினை எடுத்துரைக்கின்றது. - https://www.jeyamohan.in/223213/
அவரது நினைவாக இவ்விணைப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
 

 

கருத்து என்னுடையது! படம் , செயற்கை அறிவு (Google's Nano Banana) , உன்னுடையது!

கருத்து என்னுடையது! படம் , செயற்கை அறிவு (Google's Nano Banana) , உன்னுடையது

வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".

எழுத்தாளர் நடேசனின் பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் பயணத்தொடர்



 - குதிரைகளில் நடேசனும், நண்பரும் -

பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் நடேசன் எழுதும் 'பஹல்காம் (Pahalgam) நினைவுகள்' பயணத் தொடரின் முதல் அத்தியாயம். 
 
இங்குள்ள புகைப்படம் பயணத்தில் அவரும், நண்பரும் குதிரைகளில் பயணிப்பதை வெளிக்காட்டும். நான் முதலில் அவற்றைக் கழுதைகள் என்று நினைத்து விட்டேன். போர் புரியப் பாவித்த தம்மை இப்படிக் கழுதைகளைப் போல் மானுடர் பொதி சுமக்கவும், பயணிகளைச் சுமக்க வைத்து வீட்டார்களே என்று குதிரைகளின் உளவியலும் கழுதைகளைப் போல் மாறி விட்டன போலும்!
 
இப்புகைப்படத்தில் கழுதைகளில் இருக்கும் மானுடர் இருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிகரமான உணர்வுகள் தன்னிச்சையானவை. என்னை மிகவும் இப்புகைப்படம் கவரக் காரணமானவை. 
 
இப்புகைப்படத்தில் காணப்படும் குதிரைகள் இரண்டும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், மானுடர்கள் இருவரும் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெளிவாகக் காண முடிகின்றது. அவை 180 பாகை வித்தியாசத்தில் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. பாவம், குதிரைகளுக்குத் தெரியாது தம்மேல் இருப்பவர்களில் ஒருவர் இதுவரை மிருக வைத்தியராகவிருந்து ஓய்வு பெற்றவர் என்னும் விடயம். தெரிந்திருந்தால் 'இது முறையோ? இது தகுமோ?" என்று நடேசனிடம் அவை முறையிட்டிருக்கும்.
 
நடேசனின் பயணத்தொடர்கள் சுருக்கமான விபரிப்புகளுடன் கூடிய சுவையான பயணத்தொடர்கள். நான் விரும்பி வாசிப்பவை. அப்பகுதிகளுக்கு நானே சென்ற உணர்வைத்தருபவை. 
 
**************************************************************************** 
பயணத்தொடர் _ பஹல்காம் (Pahalgam) நினைவுகள் (1) - நடேசன். -
 
2025 சித்திரை 22, புதன்கிழமை
மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.

Tuesday, September 23, 2025

தமிழக அரசியல் ஒரு பார்வை!


எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில்  திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து  வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன. 

இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.

(ஏப்ரில் 23 உலகப் புத்தக தினம்) வ.ந.கிரிதரனின் குரலில் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி வாழு என்று சொன்னால் வாழுவேன்".

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி வாழு என்று சொன்ன...