Thursday, November 13, 2025

கவிஞர் தாமரையின் பாடல்களும், வட மொழிச் சொல்லும் பற்றி...


[டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]


கவிஞர் தாமரையைப் பற்றிக் குறிப்பிடுகையில் வேற்று மொழியல்லாத தமிழ்ச் சொற்களை மட்டும் கவிதை எழுதுபவர் என்று கூறப்பட்டிருந்ததை அண்மையில் இணையத்தில் வாசித்தேன். இது உண்மையா? 'வாரணம் ஆயிரம்' படத்தில் வரும் அவரது புகழ்பெற்ற பாடல் 'நெஞ்சுக்குள் பூத்திடும் மாம்ழை' முழு வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதில் வரும் ஓம், ஷாந்தி, ஜீவன் இவையெல்லாம் வட் சொற்கள்.  என்னைபொறுத்தவரையில் நான் தனித்தமிழ் வெறியன்னலன். மொழியும் பரிணாம வளர்ச்சியில் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளமடைகின்றது என்று நம்புபவன்.  இந்நிலையில் தாமரை தமிழ்ச் சொற்களை, வட சொற்களைக் கலந்து பாடல்கல்  எழுதுவதை ஏற்பதில் எனக்குத் தயக்கமேதுமில்லை.  என் அபிமானக் கவிஞர் மகாகவி பாரதியார் தாராளமாகவே வடமொழிச் சொற்களைப் பாவித்திருக்கின்றார். 

பாடலைக் கேட்டு மகிழ் - https://www.youtube.com/watch?v=630HSN45fKk

காலத்தால் அழியாத கானம்: 'புதிய வானம்! புதிய பூமி'



'அன்பே வா' திரைப்படத்தில், கவிஞர் வாலியின் வரிகள் , டி,எம்.எஸ் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், எம்ஜிஆரின் நடிப்பில் காலத்தால் அழியாத கானமாக நிலைத்து நின்று விட்டது.
 
இவ்விதமான எம்ஜிஆரின் கருத்தாழம் மிக்க, வாழ்க்கைக்கு வழி காட்டும் , புத்துணர்ச்சி ஊட்டும் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்களாகத் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கப்போகின்றன.
 
எந்த ஒரு நடிகரும் செய்யாத வேலையினை எம்ஜிஆர் செய்திருக்கின்றார். அவரது படங்கள் ஒவ்வொன்றிலும் இத்தகைய கருத்து மிக்க, இனிய, புத்துணர்ச்சி தரும் பாடலொன்று இருக்கும். வாழ்க்கைக்கு வழி காட்டும் , பயனுள்ள, ஆரோக்கியமான கருத்துகளைக் கூறும் பாடல்கள் இவை. எம்ஜிஆரின் சமுதாயப் பிரக்ஞையை வெளிப்படுத்துபவை இவ்வகைப் பாடல்கள்.

Wednesday, November 12, 2025

புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 
  
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

Tuesday, November 11, 2025

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலின் புதிய அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு!


தமிழகத்தில் 2015இல் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'குடிவரவாளன்' நாவலின் புதிய மின்னூற் பதிப்பு அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளியாகியுள்ளது.


எண்பதுகளில் , நியூ யோர்க் மாநகரில் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் இருப்புக்கான தப்பிப் பிழைத்தலை விபரிக்கும் நாவல்.

அதற்கான இணைப்பு - https://amzn.to/4qYfSUw

Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.

Monday, November 10, 2025

காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.


காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.

எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸ் & வாணி ஜெயராம் குரலில், ரஹ்மான் & அமலா நடிப்பில் உருவான இனிய பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'கண்ணே கனியமுதே'.

[Digiat Art (Google Nano Banana) help: VNG ]

Tamil Song -  Ninnaiye Rathi Endru 
Singers: K. J. Yesudas,Vani Jairam 
Music: M.S.V
Movie: Kanne Kaniyamuthey
Cast: Rahman & Amala
Lyrics: Makakavi Barathiyaar

https://www.youtube.com/watch?v=PF_g8n2OUvA

பாரதியார் சரித்திரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு - செல்லம்மா -


 பாரதியார் சரித்திரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு -  செல்லம்மா பாரதி - https://amzn.to/47MBNVF

பாரதி : நினைவுகள் - ம.கோ.யதுகிரி அம்மாள் - https://amzn.to/4oWtPQN


 


Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.

Sunday, November 9, 2025

வானியற்பியல் அறிஞர் George Gamow இன் புகழ் மிக்க அறிவியல் நூலான One Two Three Infinity தமிழில் அமேசன் - கிண்டில் மின்னூலாக..!


புகழ் மிக்க வானியற்பியல் அறிஞர்களில் ஒருவர் ரஷிய அமெரிக்கரான George Gamow. இவரது மிகச்சிறந்த நூலான  One Two Three Infinity ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இத்துறையில் ஆர்வம் மிக்க வாசகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு வாசிப்புத்  தீனியாக அமையும் நூல். 

ஒன்று, இரண்டு, மூன்று, முடிவிலி: அறிவியல் உண்மைகளும் ஊகங்களும் (Tamil Edition) Kindle Edition  by ஜார்ஜ் கேமாவ் (Author), Jeyapandian Kottalam (Translator)   https://amzn.to/4hPS0OB

Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases. 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...