Thursday, May 7, 2026
மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
Monday, May 4, 2026
நடிகர் விஜய்யின் ஆச்சரியப்படத்தக்க வெற்றியின் தன்மை பற்றிய ஓர் அலசல்!
நடந்து முடிந்த தமிழகச் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் கருத்துக்கணிப்புகள், மற்றும் என்னைப்போன்றவர்களின் ஊகங்களைப் பொய்யாக்கி முதலிடத்தில் 108 தொகுதிகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். தனது பட நாயகன்களைப்போல் சவால் விட்டு, பஞ்ச் வசனங்கள் பேசி, தனியாக நின்று அரசியலில் பழம் பெரும் பெருச்சாளிகளை எல்லாம் ஓரங்கட்டி முன்னுக்கு வந்திருக்கின்றார். அதற்காக அவருக்கு என் வாழ்த்துகள்.
தமிழக மக்கள் புத்திசாலிகள். எச்சரிக்கையுடன் கூடியதொரு வெற்றியைத்தான் விஜய்யிற்குக் கொடுத்திருக்கின்றார்கள். அவருக்கு அறுதிப்பெரும்பான்மையற்ற வெற்றியைத்தான் கொடுத்திருக்கின்றார்கள். எவ்விதம் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து விஜய் முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவார். ஆட்சியில் அமர்வார். பார்ப்போம் என்று எச்சரிக்கையுடன் கூடிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றார்கள்.
Sunday, May 3, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். வ.ந.கிரிதரன் குரலில் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 A
வ.ந.கிரிதரன் பாடல் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். வ.ந.கிரிதரன் குரலில் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.
நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என்
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய்
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!
யாழ்ப்பாணப் பட்டினம்: தமிழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகர் (Tamil Edition) Kindle Edition Tamil Edition by வ.ந. கிரிதரன் (Author) Format: Kindle Edition. வெளியீடு - பதிவுகள்.காம் -
யாழ்ப்பாணப் பட்டினம்: தமிழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகர் (Tamil Edition) Kindle Edition
Tamil Edition by வ.ந. கிரிதரன் (Author) Format: Kindle Edition. வெளியீடு - பதிவுகள்.காம் -
https://www.amazon.com/dp/B0GX3B894L
காவிரிப்பூம்பட்டினம் எவ்விதம் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகராக விளங்கியதோ அவ்விதமே சங்க காலத்திலிருந்து புகழ்பெற்ற துறைமுக நகராக யாழ்ப்பாணப் பட்டினமும் விளங்கியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்த யாழ்ப்பாணப் பட்டினம் காலப்போக்கில் மாந்தைதன் புகழ்மிக்க துறை முக அந்தஸ்தினை இழந்திருந்தது போல் இழந்திருந்தாலும் முக்கியமான துறைமுக நகராக இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் தொடர்ந்தும் பலராலும் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர்தான் இந்தியக் கல்வெட்டுகளில், திருப்புகழில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.
வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்!
வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்!
வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். மொழிபெயர்ப்பு - எழுத்தாளர் லதா ராமகிருஷ்னன் - அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். வெளியீடு - பதிவுகள்.காம் வெளியீடு!
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம்
1. An Immigrant - வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன் - https://www.amazon.com/dp/B0G1NJDDBB
2. Amerivca - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன் - https://www.amazon.com/dp/B0G1L9D2G5
காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு! பதிவுகள்.காம் வெளியீடு!
காலவெளி: கண்ணம்மாக் கவிதைகள் - அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு! பதிவுகள்.காம் வெளியீடு!
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம்
வ.ந.கிரிதரன் - காலவெளி - கண்ணம்மாக் கவிதைகள் - பதிவுகள்.காம்
https://www.amazon.com/dp/B0DV76H5BS
நான் இருப்புப் பற்றிய தேடல் மிக்கவன். அறிவியலூடு இருப்புப் பற்றிய தேடலில் ஈடுபடுவதில் எனக்குப் பெரு விருப்புண்டு. எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சக் காட்சிகள் , குறிப்பாக நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானம் இவற்றில் மெய்ம்மறந்து நிற்பதில் மிகுந்த ஈடுபாடு மிக்கவன் நான். விரிந்திருக்கும் இரவு வானும், ஆங்கு தெரியும் சுடர்களும், கோள்களும், உப கோள்களும், எரி நட்சத்திரங்களும் என் மனத்தைக் கிளர்ச்சியடைய வைக்கின்றன. இருப்புப் பற்றிய சிந்தனைகளைத்தூண்டி விடுகின்றன.
அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்கள்!
அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்கள்!
அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாக, பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளிவந்த எனது நாவல்கள் இவை! இவை பதிவுகள்.காம் வெளியீடுகள்!
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம்
1. அமெரிக்கா - வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B08T7TLDRW
2. குடிவரவாளனந் வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B0G1RWLZXL
3. நவீன விக்கிரமாதித்தன் - வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B0F3GPD1VZ
4. பால்ய காலத்துச் சிநேகிதி! - வ.ந.கிரிதரன் - https://www.amazon.com/dp/B0F1RCDLNR
Subscribe to:
Posts (Atom)
யாழ்ப்பாணம் போவோமா?
[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
