Sunday, May 3, 2026
யாழ்ப்பாணப் பட்டினம்: தமிழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகர் (Tamil Edition) Kindle Edition Tamil Edition by வ.ந. கிரிதரன் (Author) Format: Kindle Edition. வெளியீடு - பதிவுகள்.காம் -
யாழ்ப்பாணப் பட்டினம்: தமிழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகர் (Tamil Edition) Kindle Edition
Tamil Edition by வ.ந. கிரிதரன் (Author) Format: Kindle Edition. வெளியீடு - பதிவுகள்.காம் -
https://www.amazon.com/dp/B0GX3B894L
காவிரிப்பூம்பட்டினம் எவ்விதம் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகராக விளங்கியதோ அவ்விதமே சங்க காலத்திலிருந்து புகழ்பெற்ற துறைமுக நகராக யாழ்ப்பாணப் பட்டினமும் விளங்கியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்த யாழ்ப்பாணப் பட்டினம் காலப்போக்கில் மாந்தைதன் புகழ்மிக்க துறை முக அந்தஸ்தினை இழந்திருந்தது போல் இழந்திருந்தாலும் முக்கியமான துறைமுக நகராக இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் தொடர்ந்தும் பலராலும் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர்தான் இந்தியக் கல்வெட்டுகளில், திருப்புகழில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.போர்த்துக்கேயர் வந்தபோதும் வடக்கிலிருந்த தமிழர் இராச்சியத்தை யாழ்ப்பாணப் பட்டினத்தின் பெயரைப்பாவித்துத்தான் அழைத்தார்கள். ஏன்? அப்போதும் யாழ்ப்பாணம்தான் முக்கிய நகராக, தமிழர் இராச்சியத்தை வெளிப்படுத்தும் பெயராக வழக்கில் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்கள் யாழ்ப்பாணப் பட்டனம் என்பதைத் தம் மொழியில் ஜாஃப்னா பட்டவ் எனக் கொச்சையாக உச்சரித்து அழைத்திருக்கின்றார்கள்.
ஒல்லாந்தரும் யாழ்ப்பாணப் பெயரைத்தான் பாவித்திருக்கின்றார்கள். கைலாயமாலையும் யாழ்ப்பாணம் என்று குறிப்பிட்டிருக்கின்றது. மயில்வாகனப்புலவரும் யாழ்ப்பாண வைபவமாலை என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றார். ஏன் நல்லூர் வைபவமாலை என்றோ அல்லது வேறு பெயரோ அச்சரித்திர நூலுக்குக் குறிப்பிடப்படவில்லை?
யாழ்ப்பாண வைபவமாலையை விடச் சபுமல் குமாரயா யாழ்ப்பாண வெற்றியைச் சிறப்பித்துப்பாடும் கோகில சந்தேசய அதன் சமகால வரலாற்றைப் பற்றிக் கூறும் நூல். அதனால் நகரைப்பற்றிக் கூறும் தகவல்கள் ஓரளவு உண்மைக்குச் சமீபமானவையாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. அதில் யாழ்ப்பாண நகரத்தை யாப்பா பட்டுன என்று விபரிக்கும் பகுதிகள் அந்நகரின் சிறப்பான நகர அமைப்பை எடுத்துக்காட்டுகின்றன. குபேரபுரியுடன் ஒப்பிடுகின்றது. இது யாழ்ப்பாணப் பட்டினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதற் பத்து நாவல்கள்!
அவ்வப்போது சிந்திக்கும்போது உடனடியாக நினைவுக்கு வரும் 10 நாவல்களைக் கீழே தந்துள்ளேன். உங்களுக்குப் பிடித்த நாவல்களைப் பற்றிய எண்ணங்களைப் பகி...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment