Friday, May 22, 2026

பாரதியார் பாடல் : சரஸ்வதி காதல் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி.


- வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி. டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி -


பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் அங்குப்
பள்ளிப் படிப்பினிலே -- மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் -- கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா!     

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் 

ஆடிவரு கையிலே -- அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், -- அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், -- பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ மென்றால், -- விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் ஆற்றங் கரைதனிலே -- தனி்
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன், -- அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை
ஏற்று மனமகிழ்ந்தே அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய்? என்று
போற்றிய போதினிலே, -- இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா!     

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் 

சித்தந் தளர்ந்ததுண்டோ? -- கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் -- பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் -- பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் -- வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா!

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் 

No comments:

'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு!

 - இயக்குநர் பாரதிராஜா - இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை  ஆசிரியராக, நடிகராக எனப் பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் அவர். நாடகத்தனமான வசனங்களு...