Friday, July 23, 2021

அபுனைவிலொரு புனைவோவியம் : 'கமலாம்பாள் சரித்திரம்' நாவற் காட்சி!

அபுனைவொன்றில் குறிப்பிடப்படும் புனைவொன்றில் இடம் பெறும் காட்சிக்கான அட்டை ஓவியம்!
 

 
இங்குள்ள கல்கி சஞ்சிகையின் ஓவியர் விஜயா வரைந்த அட்டை ஓவியத்துக்குச் சிறப்பொன்றுண்டு. பொதுவாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகும் புனைகதைகளுக்குத்தான் ஓவியங்கள், அட்டை ஓவியங்கள் வரைவார்கள். ஆனால் இங்குள்ள அட்டை ஓவியமோ அபுனைவில் குறிப்பிடப்படும் புனைகதையொன்றில் இடம் பெறும் காட்சிக்காக வரையப்பட்ட ஓவியம்.
 
நாவலாசிரியர் ராஜம் ஐயரின் புகழ்பெற்ற நாவல் 'கமலாம்பாள் சரித்திரம்'. அவரது நூற்றாண்டையொட்டித் திறனாய்வாளார் சோ.சிவபாதசுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை மேற்படி கல்கி இதழில் (23.01.1972) வெளியாகியுள்ளது. அக்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள 'கமலாம்பாள் சரித்திரம்' நாவலில் வரும் ஒரு காட்சியைத்தான் ஓவியர் விஜயா அட்டை ஓவியமாக்கியுள்ளார். அது பற்றிய விளக்கமும் மேற்படி சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!

இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால...

பிரபலமான பதிவுகள்