Sunday, July 25, 2021

கேட்டு மகிழ்வோம்: வ.ந.கிரிதரனின் ' ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'


எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'  என்னும் கதையினை 'Witty Garden' என்னும் 'யு டியூப் சன'லில் கேட்டு மகிழுங்கள். இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணனால் செய்யப்பட்டது. அதனை இலண்டலிருந்து வெளியான 'தமிழ் டைம்ஸ்' ஆங்கிலச் சஞ்சிகை மீள் பிரசுரம் செய்தது.

இச்சிறுகதை எஸ்.பொ , இந்திரா பார்த்தசாரதி தொகுத்து  மித்ர பதிப்பக வெளியீடாக வெளியான 'பனியும் பனையும்'  தொகுப்பிலும் வெளியானது.


இந்த யு  டியூப் தளத்தில் எனது 'கணவன்' சிறுகதையும் ஒலி வடிவில் முன்னர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இச்சிறுகதையைப் பற்றிய அறிமுகத்தைக் கேட்டு மகிழ: https://www.youtube.com/watch?v=zcIZfQkqGOk

No comments:

யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva)!

யார் இவர்? இவர்தான்  டில்வின் சில்வா (Tilvin Silva).   ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி JVP) பொதுச்செயலாளர். ஜேவிபியின் முதலாவது புரட்சி தோல...

பிரபலமான பதிவுகள்