Monday, November 2, 2026

கவிதை: செயற்கை எழுத்தாளர்கள்! - வ.ந.கிரிதரன் -




ஒரு பந்தி எழுத்துப் பிழை இல்லாமல்
எழுத முடியாதவர்
எழுதுகின்றார் பக்கம் பக்கமாக,
எழுத்துப்பிழை இல்லாமல்
எழுதுகின்றார்.
எண்ணிக்கையற்று எழுதுகின்றார்.
எண்ணிக்கையற்ற பக்கங்களில் எழுதுதால்
இவர்கள் நினைக்கின்றார்கள்
இப்படி எழுதி விட்டால்
இவர்கள் எழுத்தாளர்கள்
ஆகி விட்டார்கள்
என்று.
நீங்கள் எத்தனை பக்கங்கள் எழுதினாலும்
நீங்கள் எப்படித்தான் சிந்தனையாளர்கள் ஆகக்
காட்டிக்கொண்டாலும்.
உங்களால் நீங்கள் எழுதிய
எந்தவிடயங்களைப் பற்றியும்
மேடைகளில்
தர்க்கம் செய்ய முடியாது.
ஏனெனில்
தர்க்கம் செய்வதற்குச்
இயற்கை நுண்ணறிவு NI அறிவு தேவை.
செயற்கை நுண்ணறிவு AI அல்ல.
மேடையில்
இயற்கை நுண்ணறிவு
இல்லாவிட்டால்,
செயற்கை நுண்ணறிவு
உதவிக்கு வராது.

மேலும்,
உண்மை எழுத்தில் விரவிக்கிடக்கும்
உணர்ச்சி வாசிப்பவரைத் தட்டி எழுப்பும்.
உருக வைக்கும், உணர வைக்கும்.
உத்வேகம் கொள்ள வைக்கும்.
செயற்கை நுண்ணறிவின் 
செயற்கை எழுத்து 
உங்களை உருக வைக்காது.
உத்வேகம் கொள்ள வைக்காது.
ஏனெனில்
அது வெறும் தகவல்களின் குவியல்
மட்டுமே.
அனுபவங்கள் உருவாக்கிய,
அனுபவங்கள் தந்த உணர்வுகளின்
வெளிப்பாடுகள் அல்ல அவை.



No comments:

வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI

வ.ந. கிரிதரனின் பாடல் வரிகள்: மனத்தை மயக்கும் இந்தநிலா! இசை , குரல் & ஓவியம் : ஜெமினி AI உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக...