Monday, December 27, 2021
எனக்குப் பிடித்த வரலாற்றுப் பாத்திரம்! - வ.ந.கிரிதரன் -
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு அரசியலில் பெண் ஒருவர் முக்கிய இடத்திலிருந்திருக்கின்றார் என்பதே வியப்பூட்டுவது. சாணக்கியம் நிறைந்த அரசியல் மதியூகியாக, அரசியல் ஆலோசகராக இப்பெண்மணி அன்றே விளங்கியிருக்கின்றார். அப்பெண்மணி யார்? இந்நேரம் நீங்கள் அவர் யாரென்பதை ஊகித்திருப்பீர்கள். அவர்தான் குந்தவைப்பிராட்டியார். முதலாம் இராசராச சோழனின் அக்கா குந்தவைப்பிராட்டியார். பொன்னியின் செல்வன் முதலாம் இராசராசனின் சகோதரியான குந்தவையார்தான் வாணர்குலத்து வீரனும், நாவலின் கதாநாயகனுமான வந்தியத்தேவனின் மனைவியாராகத் திகழ்ந்தவரும் கூட.
Friday, December 17, 2021
அறிமுகம்: வ.ந.கிரிதரனின் நேரம் - யு டியூப் சானல்!
நண்பர்களே! 'வ.ந.கிரிதரனின் நேரம்' என்னும் யு டியூப் 'சான'லொன்றினை ஆரம்பித்துள்ள விடயத்தை ஏற்கனவே அறியத்தந்திருந்தேன். இதுவரையில் அங்கு 15 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கலை,இலக்கியம், சமூகம், அரசியல் & அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப்பற்றிய எனது எண்ணப்பதிவுகளாக அவை இருக்கும். சிறிய காணொளிகளில் அவை அமைந்திருக்கும்.
ஏற்கனவே அவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்திருந்தேன். இனியும் பகிர்ந்துகொள்வேன்.
Monday, December 13, 2021
(யு டியூப்) வ.ந.கிரிதரனின் நேரம்: மழையும், நானும்
நண்பர்களே! ஒரு பரீட்சார்த்த முயற்சியாக யு டியூப்பில் ஒரு சானலை ஆரம்பித்துள்ளேன். அதில் முதல் முறையாக ஒரு காணொளியை பதிவேற்றம் செய்துள்ளேன். அவ்வப்போது பல்வேறு விடயங்களைப்பற்றிய என் சிற்றுரைகள் இங்கு இடம் பெறும். என் படைப்புகள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் இங்கு இடம் பெறும். இக்காணொளியினை நான் எனது ஐபோன் மூலம் உருவாக்கினேன். முதல் முயற்சியென்பதால் குறைகள் நிச்சயமிருக்கும். காலப்போக்கில் அவை குறைந்து நிறைகள் அதிகரிக்கும். காணொளியைப் பாருங்கள். உங்கள் கருத்துகள் எவையாயினும் அவற்றைப் பதிவு செய்யுங்கள். அவை நிச்சயம் எதிர்காலக் காணொளிகளுக்கு ஆரோக்கியமாக உதவும். நன்றி
Wednesday, August 25, 2021
இதுவரை வெளியான வ.ந.கிரிதரனின் நூல்கள் & மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு)!
1. அமெரிக்கா (நாவல் & சிறுகதைத்தொகுப்பு. ஸ்நேகா - மங்கை பதிப்பக வெளியீடு)
2. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல். ஸ்நேகா பதிப்பக வெளியீடு)
3. மண்ணின் குரல் (நாவற் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு)
4. குடிவரவாளன் (நாவல். ஓவியா பதிப்பக வெளியீடு)
5. அமெரிக்கா (நாவல். திருத்திய பதிப்பு. மகுடம் வெளியீடு)
6. எழுக அதி மானுடா (கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)
7. மண்ணின் குரல் (நாவல், கட்டுரை & கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)
Thursday, July 29, 2021
சிறு நாவல்: பால்ய காலத்துச் சிநேகிதி! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!
'டொராண்டோ' மாநகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.
"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."
அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.
| [Digiat Art (Google Nano Banana) help: VNG ] |

Sunday, July 25, 2021
கேட்டு மகிழ்வோம்: வ.ந.கிரிதரனின் ' ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'
எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' என்னும் கதையினை 'Witty Garden' என்னும் 'யு டியூப் சன'லில் கேட்டு மகிழுங்கள். இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணனால் செய்யப்பட்டது. அதனை இலண்டலிருந்து வெளியான 'தமிழ் டைம்ஸ்' ஆங்கிலச் சஞ்சிகை மீள் பிரசுரம் செய்தது.
Friday, July 23, 2021
Subscribe to:
Comments (Atom)
கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -
இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...