Saturday, January 20, 2024

Ursula Andress in Undress! A movie ad I never forget!


எமது இளமைப்பருவத்தில் எம்மையெல்லாம் கவர்ந்த ஹொலிவூட் நடிகர் 'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி ( நாம் அழைப்பது சீன் கானரி 🙂 ). யார் யாரோ 'ஜேம்ஸ் பாண்ட்'டாக நடித்திருந்தாலும் எம்மைப்பொறுத்தவரை இவர்தான் நிரந்தர ஜேம்ஸ் பாண்ட்.
 
இவரைப்பற்றிய, இவரது திரைப்படமான 'டொக்டர் நோ' யாழ் ராஜா திரையரங்கில் மீளத்திரையிடப்பட்டபோது பார்த்த அனுபவம் பற்றி, அவர்களது சுவையான திரைப்பட விளம்பரம் பற்றி ஒரு சிறு குறிப்பினை எனது ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். To read the full article
 

Lee van Cleef: The Best of The Bad!


எனது ஆங்கில வலைப்பதிவில் நடிகர் லீ வான் கிளிவ் பற்றி Lee van Cleef: The Best of The Bad! என்னும் தலைப்பில் எழுதிய குறிப்பினை எனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
To read the full article
 

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி.....



கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றினை எனது ஆங்கிலப் பக்கத்தில் எழுதியுள்ளேன். இது ஒரு திறனாய்வுக் கட்டுரையல்ல. நினைவில் இருந்த விடயங்களை வைத்து எழுதப்பட்ட அறிமுகக் குறிப்பு மட்டுமே. இதில் உதாரணத்துக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்கள் முழுமையானவை அல்ல. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.
 
On Canadian Tamil Literature!
Diaspora Tamil literature is a common term denoting the literature of expatriate Tamils. Tamil people live worldwide in many countries, including Western countries. Most of them migrated to other countries after the communal riots that happened in 1983, which is generally known as 'Black July '83.' Now, more than thirty years have passed since they left. During this time, the diaspora literature of Tamils has achieved many milestones in various literary forms such as short stories, poems, dramas, novels, and non-fiction. To read the full article

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...


தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவரைப்பற்றி எனது ஆங்கில வலைப்பதிவில் ஒரு சிறு குறிப்பினை இட்டுள்ளேன். அதன எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். 
 
On the memory of Kirk Douglas...
 
When Kirk Douglas passed away, he was 103 years old. He led a complete, satisfactory life. Despite being nominated thrice for the Oscar award, he never received it for his acting prowess.The denied Oscar award was given to his son, Michael Douglas, for his role in Oliver Stone's 'Wall Street'. Late in his life, he was awarded a lifetime achievement Oscar. To Read the full article
 

Tuesday, January 16, 2024

'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்!


இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத்  தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

Monday, January 15, 2024

வாழ்த்துகின்றோம்: அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!


கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற நவீன  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள்  குறித்த ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அறிவியல் அறிஞர் சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்து வரும் திரு.ஜெயபாரதன்  அணுப்பொறியியலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.  வானியற்பிய, வானியல் , பற்றும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய இவரது தமிழ்க்கட்டுரைகள் முக்கியமானவை.இவை தவிர கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு , கவிதை  என இவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.  

Friday, January 12, 2024

எனது ஆங்கிலக் கண்ணம்மாக் கவிதைகள் இரண்டு!


எனது ஆங்கில வலைப்பதிவில் எழுதிய கண்ணம்மாக் கவிதைகள் இரண்டு இவை.

Poem: Kannamma! We Are the Elements of a Four-Dimensional painting! (Kannamma Poem 1)

Expanding in a large space,
Who drew this four-dimensional painting here,
dear Kannamma?
Do you think there are
more multi-dimensional paintings,
beyond four that exist parallel Kannamma?
If they do, do you believe  or
Do you think
There is a way to reach them
Kannamma?
Please tell me,
my dear Kannamma!

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...