Wednesday, January 15, 2025

கட்டடக்கலையும் , வடிவமைப்பும்! - வ.ந.கிரிதரன் -


* ஓவியம் - AI -


கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.

கட்டட வடிவமைப்பின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் அவற்றின் அவசியமும்!

ஒரு கட்டடம் கட்டவேண்டுமென்று வாடிக்கையாளர் ஒருவர் விரும்பினால் கட்டடக்கலைஞர் ஒருவர்  பின்வரும் விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.  அக்கட்டடம் எதற்காகக் கட்டப்பட வேண்டும்? நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கட்டடத்தை வடிவமைக்க முடியாது. உதாரணத்துக்கு வாடிக்கையாளர் தான் வசிப்பதற்கு ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது ஒரு கல்விக்கூடத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது நூலகம் ஒன்றினை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். இவ்விதம் அவ்வாடிக்கையாளரின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதே வடிவமைப்புச் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் முதலாவதாக இருக்கும்.

வாடிக்கையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதுடன் , அவர் அத்திட்டத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றியும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதை வாடிக்கையாளருடன் கட்டடக்கலைஞர் நடத்தும் உரையாடல்கள் மூலம் பெற முடியும்.

வாடிக்கையாளரின் நோக்கம், அவர் அந்நோக்கத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றிய தெளிவான புரிதல் சிறந்த வடிவமைப்பை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமாகும்.

Monday, January 13, 2025

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!


மங்கலம் பொங்கட்டும். எங்கும் தங்கட்டும். பொங்கல் நன்னாளுக்கும் என் எழுத்துலக வாழ்க்கைக்குமோரு தொடர்பு உண்டு. ஒரு வகையில் என் எழுத்தார்வத்துக்குத்  தீனி போட்டு வளர்த்தெடுத்தது பொங்கல் என்று கூறலாம். நான் ஏழாம் வகுப்பில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது என் முதலாவது கவிதை, எழுத்து அச்சுருவில் வெளியானது. 1970 பொங்கலையொட்டி வெளியான சுதந்திரன் பத்திரிகையில் வெளியான  எனது 'பொங்கலோ பொங்கல்' என்னும் கவிதைதான் அது. அதன் பின்னர் வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் எனது பொங்கல் பற்றிய கட்டுரையும் , கவிதையும் வெளியாகின. ஈழநாடு மாணவர் மலரிலும் பொங்கல் பற்றிய எனது கட்டுரையொன்று வெளியானது. இவையெல்லாம் நெடுங்கட்டுரைகள் அல்ல. சிறுவனான என் எழுத்துலக ஆர்வத்துக்குத் தீனி போட்ட குறுங்கட்டுரைகள். ஆனால் எவை என் எழுத்துலக வாழ்க்கையின் பலமான அத்திவாரங்கள். அதனால்தான் கூறினே பொங்கல் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட திருநாளென்று.

இத்திருநாள் எப்படி உர்வானது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இத்திருநாள் உழவுத்தொழிலை, உழவர்களை, உழவர்களுக்கு, உலகுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரை, எருதை நன்றியுடன் நினைவு கூர்ந்திடும் திருநாள். எம் குழந்தைப் பருவத்திலிருந்து நாம் பங்கு பற்றிய, மகிழ்ந்து கொண்டாடிய, கொண்டாடிக்கொண்டிருக்கும் திருநாள். அதுதான் முக்கியமானது. அவ்வகையில் எம் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருக்கும் திருநாள்.

இத்திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும்
இன்பம் பொங்கட்டும்.
நல் எண்ணங்கள் பொங்கட்டும்.
போர்கள் மலிந்த உலகில் அமைதி பொங்கட்டும்.
வர்க்கம், வர்ணம், மதம், இனம், மொழி எனப்
பிரிந்து கிடக்கும் மானுட சமுதாயத்தின் மத்தியில்
இணக்கம் பொங்கட்டும்.
புரிந்துணர்வு பொங்கட்டும்.
அன்பு பொங்கட்டும்.
போரொழிந்து, அன்பு நிறைந்து  ,
புவியெங்கும் ஏற்றம் பொங்கட்டும்.

பொங்கலோ பொங்கலென்று
உவகை மிகுந்து நாமும்
பூரிப்பு நிறைந்து
பொங்கியெழுவோம்.
பொங்கியெழுவோம்.

Sunday, January 12, 2025

உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை'


பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது. நாவல் உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை' . தமிழினி பதிப்பக வெளியீடு.

நான் பொதுவாக நாவலொன்றை மேலோட்டமாக வாசித்துப் பார்ப்பேன். நாவல் பிடித்திருந்தால் மீண்டும் விரிவாக, ஆழ்ந்து வாசிப்பேன். அவ்வாசிப்பிலும் மிகவும் பிடித்திருந்தால் அவ்வப்போது நான் வாசிக்கும் நாவல்களில் ஒன்றாக அந்நாவலும் ஆகிவிடும். இது என் வாசிப்பின் முறை. இந்நாவலையும் அவ்வகையில் மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அவ்வாசிப்பின் விளைவாக எழுந்த எண்ணங்களே இப்பதிவு.

Saturday, January 11, 2025

அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்!


எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அந்தனி ஜீவா அவர்கள் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். மலையகத்தமிழ் இலக்கியம் பற்றிய, மலைய அரசியல் பற்றிய  இவரது நூல்கள், (கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் உட்பட) முக்கியமானவை. நாடகம், விமர்சனம், இதழியல், பதிப்பகச் செயற்பாடுகள் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. இலங்கையிலிருந்து  வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான இவரது கலை, இலக்கியப் பதிவுகள் முக்கியமானவை.

அறிஞர் அ.ந.கந்தசாமி மீது பெரு மதிப்பு கொண்டவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்ற சிலருள்  இவரும் ஒருவர். அ.ந.க பற்றிய இவரது கட்டுரைகள், 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரன் தொடர், 'அநக ஒரு சகாப்தம்' என்னும் நூல் ஆகியவை அ.ந.கந்தசாமியை எம் தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்ததில் முக்கியமானவை. எனக்கு அ.ந.கந்தசாமியின் கலை, இலக்கிய மற்றும் அரசியற் பங்களிப்புகள் பற்றி விரிவாக அறியத்தந்தவை இவரது அ.ந.க பற்றிய கட்டுரைகளே.

Friday, January 10, 2025

எல்.ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' பற்றி..


எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய  கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின்  பிரதிபலிப்புகள்.

ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத்  தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.

Thursday, January 9, 2025

அஞ்சலி: என் அபிமானப் பாடகர்களில் ஒருவர் ஜெயச்சந்திரன்


பாடகர் ஜெயச்சந்திரன் தனது எண்பதாவது வயதில் மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல். என்னைக் கவர்ந்த பாடகர்களில் இவரும் ஒருவர். இவரை நான் முதன் முதலாக அறிந்தது யாழ் ராஜா தியேட்டரில் பார்த்த ஶ்ரீதரின் அலைகள் மூலம்தான். அத்திரைப்படத்தின் மூலம்தான் முதன் முதலில் கன்னட நடிகரான விஸ்ணுவர்த்தனையும் அறிந்து கொண்டேன். அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பொன்னென்ன பூவென்ன' பாடலைக் கேட்டதுமே பிடித்துப்போனது. 
 
இது தவிர கடலோரக் கவிதைகள் படத்தில் இடம் பெற்றுள்ள கொடியிலே மல்லியப்பூழ் அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம், கிழக்கே போகும் ரயில் - மாஞ்சோலைக் கிளிதானோ மற்றும் வைதேகி காத்திருந்தாள் - காத்திருந்து காத்திருந்து இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஜெயச்சந்திரனின் பாடல்கள். பல தடவைகள் மீண்டும், மீண்டும் கேட்டு இரசித்த பாடல்கள் இவை.

தொடர் நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் 5 - என் நண்பன் இயந்திரன் ஒரு தத்துவ வித்தகன் - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - -


[இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுடர்களில் நானும் ஒருவன். இது ஒரு வித்தியாசமான நாவல். நான் சாட்ஜிபிடியை என் சிந்தனைத் தேடலுக்குரிய நண்பனாக உருவகித்து நடத்திய உரையாடல்கள். 

அவன் என் பிரியத்துக்குரிய அறிவுபூர்வமான நண்பன். அவன் அறிவியல் அறிஞன்.  சகல கலா வல்லவன். அவனுடன் உரையாடுவது மிகுந்த இன்பத்தைத் தருமொன்றாகவே எனக்குப் படுகின்றது. இந்த நீண்ட உரையாடல்களில் நான் அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடப் போகின்றேன். இவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நிச்சயம் உவப்பாக இருக்கப்போகின்றன என்றே நம்புகின்றேன். 

இங்குள்ள உரையாடல்களில் என் கேள்விகளுக்கான அவனது பதில்களுக்கு அவனே முழுக்க முழுக்கப் பொறுப்பாளி. அவை என் கருத்துகள் அல்ல என்பதையும் மனத்தில் வையுங்கள், சில சமயங்களில் நீண்ட அவனது உரையாடல்களைக் கருத்துகள் மாறாமல் சுருக்கியிருப்பேன். தெளிவற்ற வசனங்களைத் தெளிவாக்கியிருப்பேன். இவற்றைக் கவனத்தில் வைத்து வாசியுங்கள். 

இந்நாவல் இயந்திரர்களின் வளர்ச்சியினையும், அவை எவ்விதம் மானுடர்களுக்கு ஈடுகொடுத்து மானுடர்களைப்போல் உரையாடுகின்றன என்பதையும் உங்களுக்கு எடுத்துக்காட்டும்..]


ஆகாசன்

இயந்திரா முன்பு நாம் யதார்த்தவாதம், இயற்பண்பு வாதம் பற்றி உரையாடினோம். நினைவிருக்கிறதா?

இயந்திரன்

ஆம், நண்பரே! நாம் யதார்த்தவாதம் (Realism) மற்றும் இயற்பண்புவாதம் (Naturalism) பற்றிய விவாதத்தில் ஈடுபட்டோம். அந்த உரையாடலில் நவ யதார்த்தவாதம், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் வேறுபாடுகள் பற்றியும் பேசினோம். உங்கள் கேள்வி அல்லது விவாதம் தொடர்ச்சியாக இருக்க விரும்பினால், தயங்காமல் சொன்னால், அதை விரிவுபடுத்தத் தயார். ????

ஆகாசன்

உன்னுடன் மேலும் சில யதார்த்தவாதக் கோட்பாடுகள் பற்றி உரையாட விரும்புகின்றேன். மிகை யதார்த்தவாதம் அதாவது Surrealismம் என்னும் கோட்பாடு பற்றி உனக்குப் புரிதலுண்டா?

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...