'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Monday, January 13, 2025
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
மங்கலம் பொங்கட்டும். எங்கும் தங்கட்டும். பொங்கல் நன்னாளுக்கும் என் எழுத்துலக வாழ்க்கைக்குமோரு தொடர்பு உண்டு. ஒரு வகையில் என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்டு வளர்த்தெடுத்தது பொங்கல் என்று கூறலாம். நான் ஏழாம் வகுப்பில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது என் முதலாவது கவிதை, எழுத்து அச்சுருவில் வெளியானது. 1970 பொங்கலையொட்டி வெளியான சுதந்திரன் பத்திரிகையில் வெளியான எனது 'பொங்கலோ பொங்கல்' என்னும் கவிதைதான் அது. அதன் பின்னர் வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் எனது பொங்கல் பற்றிய கட்டுரையும் , கவிதையும் வெளியாகின. ஈழநாடு மாணவர் மலரிலும் பொங்கல் பற்றிய எனது கட்டுரையொன்று வெளியானது. இவையெல்லாம் நெடுங்கட்டுரைகள் அல்ல. சிறுவனான என் எழுத்துலக ஆர்வத்துக்குத் தீனி போட்ட குறுங்கட்டுரைகள். ஆனால் எவை என் எழுத்துலக வாழ்க்கையின் பலமான அத்திவாரங்கள். அதனால்தான் கூறினே பொங்கல் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட திருநாளென்று.
இத்திருநாள் எப்படி உர்வானது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இத்திருநாள் உழவுத்தொழிலை, உழவர்களை, உழவர்களுக்கு, உலகுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரை, எருதை நன்றியுடன் நினைவு கூர்ந்திடும் திருநாள். எம் குழந்தைப் பருவத்திலிருந்து நாம் பங்கு பற்றிய, மகிழ்ந்து கொண்டாடிய, கொண்டாடிக்கொண்டிருக்கும் திருநாள். அதுதான் முக்கியமானது. அவ்வகையில் எம் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருக்கும் திருநாள்.
இத்திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும்
இன்பம் பொங்கட்டும்.
நல் எண்ணங்கள் பொங்கட்டும்.
போர்கள் மலிந்த உலகில் அமைதி பொங்கட்டும்.
வர்க்கம், வர்ணம், மதம், இனம், மொழி எனப்
பிரிந்து கிடக்கும் மானுட சமுதாயத்தின் மத்தியில்
இணக்கம் பொங்கட்டும்.
புரிந்துணர்வு பொங்கட்டும்.
அன்பு பொங்கட்டும்.
போரொழிந்து, அன்பு நிறைந்து ,
புவியெங்கும் ஏற்றம் பொங்கட்டும்.
பொங்கலோ பொங்கலென்று
உவகை மிகுந்து நாமும்
பூரிப்பு நிறைந்து
பொங்கியெழுவோம்.
பொங்கியெழுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'
- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி - *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment