புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் செலவழிப்பார்கள் என்றால் அது இலக்கியத்துக்கு மேலும் வளம் சேர்க்கும். உதாரணமாகப் பின்வரும் செயல்களில் அவர்கள் தம் நேரத்தைச் செலவிடலாம்:
1. உலகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது முக்கியமான படைப்புகள் பற்றி குறைந்தது மாதம் ஒரு தடவையாவது கலந்துரையாடலாம். இதன் மூலம் அவர்கள்தம் உலக இலக்கியம் பற்றிய புரிதல்கள் அதிகமாகும். அதன் விளைவாக அவர்கள் சிந்தனைகள் மேலும் விரிவடையும், தெளிவு பெறும்.
2. கலை, இலக்கிய,, அரசியல் கோட்பாடுகள், பல்வகைப்பட்ட தத்துவங்கள் பற்றிய கலந்துரையாடல்களை அவ்வப்போது நடத்தலாம். இங்கு பலர் சஞ்சிகைகளை வெளியிடுகின்றார்கள். இச்சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்குப் போதிய கலை, இலக்கிய, அரசியல் ஞானம் இருக்க வேண்டியது அவசியம். சக எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகளைச் சேகரித்துப் பிரசுரித்தால் போதுமானது என்று அவர்களில் பலர் நினைக்கின்றார்கள் போலும். இவ்விதமானவர்களைப் படைப்புகள் சேகரிப்பாளர்கள் என்று கூறலாம். ஆசிரியர்கள் என்று கூற வேண்டியதில்லை.
முரண்பாடுகள் வளர்ச்சிக்கு அவசியம். முரண்பாடுகள் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. முன்னேற்றம் இல்லை. முரண்பாடுகள் முட்டி மோதுவதற்காக அல்ல. இதனை எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment