Wednesday, January 1, 2025

'எனது குழந்தைகள்' கவிதை பற்றி...


'புதுசு' சஞ்சிகையின் ஜூலை 1984 இதழில் வெளியான கவிதை இது. துஷ்யந்தன் எழுதியது.

இந்தக் கவிதையை வாசித்தபோது குறிப்பாக 'யுத்தத் தாங்கிகளுக்கு அடியிலும் அவர்களைத்  தேடிப்பாருங்கள். அநேகமாக அவர்கள் அங்கேதான் இருப்பார்கள்.' என்ற வரிகளை வாசித்தபோது காசாவின் குழந்தைகள்தாம் என் மனக்கண்ணில் தோன்றினார்கள்.  உலகமே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மூழ்கிக்கிடக்கையில் அவர்கள் யுத்தத் தாங்கிளுக்கு அடியில் உறவுகளை இழந்து, பிரிபட்டு , இருப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். நெஞ்சம் கனத்தது.  இந்த வருடத்திலாவது அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி பிறக்கட்டும். நிம்மதி கிடைக்கட்டும். அமைதி பிறக்கட்டும்

யார் இந்தக் கவிஞன் துஷ்யந்தன்?


எனது குழந்தைகள்!

'நான் உறங்கியபோது
உணவுக்காக
என் குழந்தைகள்  எங்கோ சென்றன?
உணவு கிடைத்ததோ?
அவர்கள் இன்னும் வரவில்லை.
எனது குழந்தைகளைத் தேடித்தாருங்கள்.
பதிலுக்கு
ஒரு புன்னகை தருவேன்.

ஒரு கிழிசல் உடை,
சில  மண் பொம்மைகள்.
தெருப்பூக்கள் -
இனிப்புக் கடதாசிகள்
கைகளில் இருக்கும்.
அவர்களைக் கண்டால்
என்னிடம் அழைத்து வாருங்கள்.
பதிலுக்கு]
ஒரு புன்னகை தருவேன்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும்
அவர்கள் இருக்கலாம்.
காய்ந்த ரொட்டித் துண்டுகளும்
மிதிபட்டுச் சிதைந்த இனிப்புகளையும் தவிர
அவர்கள் ஒன்றையும்
உண்டதில்லை.
செல்வந்தர்களின்
கைகளுக்கு கீழும்
யுத்தத் தாங்கிகளுக்கு அடியிலும்
அவர்களைத்  தேடிப்பாருங்கள்.
அநேகமாக
அவர்கள் அங்கேதான் இருப்பார்கள்.


No comments:

தொடர்நாவல் - என் பிரிய நண்பன் இயந்திரனுடன் ஓர் உரையாடல்! (1) - வ.ந.கிரிதரன் & இயந்திரன் -

* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...

பிரபலமான பதிவுகள்