'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, January 29, 2025
தமிழ் எழுத்தாளர்களும், டிஜிட்டல் தொழில் நுட்பமும், ஒரு வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -
தமிழ் எழுத்தாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் வந்து மேய்கிறார்கள். முட்டி மோதுகின்றார்கள். ஆனால் இணையத்தொழில் நுட்பம் அவர்கள்தம் கலையான எழுத்துக்கலைக்கு உதவக்கூடிய விடயங்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தம் படைப்புகளைக்கூட வெளியிடுவதற்கு முயற்சி செய்வதில்லை. படைப்புகளை வெளியிடுவதென்றால் இன்னும் அச்சு வடிவில் தம் படைப்புகள் வெளிவர வேண்டுமென்றுதான் நினைக்கின்றார்கள். அவ்விதம் வெளியிடப் பணமில்லையே என்று அழுது வடிகின்றார்கள். இவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் வாழும் இன்றுள்ள உலகம் டிஜிட்டல் உலகம். எல்லாமே டிஜிட்டல் வசமாகிக்கொண்டு செல்லும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இவ்விதம் எண்ணுவது அவர்கள் காலத்தின் இயல்பையும், அது வழங்கும் பயன்களையும் அறிந்துகொள்ளவில்லையென்பதையே காட்டுகின்றது.முதலில் ஒன்றைக் கவனியுங்கள். எதற்காக உங்கள் படைப்புகள் அச்சுருவில் வரவேண்டுமென்று விரும்புகின்றீர்கள்? நூல்களை விற்றுப் பணம் சம்பாதிப்பதற்காகவா? என்னைப்பொறுத்தவரையில் உண்மையான எழுத்தாளர்கள் தம் படைப்புகள் பலரைச் சென்றடைய வேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஒரு காலத்தில் குறைந்தது ஆயிரம் பிரதிகளை அச்சடித்தார்கள். இப்பொழுது அவ்வாறு யாரும் அச்சடிப்பதில்லை. தேவைக்கேற்ப 300 அல்லது அதற்கும் குறைவாகவே அச்சடிக்கின்றார்கள். தேவைக்கேற்ப அச்சடிக்கும் நிலை டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக ஏற்பட்டு விட்டது. 300 பிரதிகள் அச்சடித்து எத்தனை பேர் வாங்கி படிக்கப்போகின்றார்கள்? வெளியீட்டு விழாவுக்கு வரும் பெரும்பாலனவர்கள் உங்கள் உறவுக்காரர், நண்பர்கள் , உங்களைத்தனிப்பட்டரீதியில் தெரிந்தவர்கள். இவர்களில் பலர் உங்கள் முகத்துக்காக வருபவர்கள். இவர்களில் எத்தனைபேர் உங்கள் நூல்களை உண்மையில் வாசிப்பார்கள் என்பது தெரியாது.
இவ்விதம் நூல்களை அச்சுருவில் கொண்டு வருவதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் படைப்புகளை டிஜிட்டல் வடிவில் மின்னூல்களாகக் கொண்டு வரலாம். எவ்விதச் செலவும் இல்லாமல் மின்னூல்களாகக் கொண்டு வரலாம். எவ்விதம் மின்னூல்களாக உங்கள் படைப்புகளைக் கொண்டு வரலாம்?
இவ்விதம் உங்கள் நூல்களை மின்னூல்களாகக்கொண்டு வருவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை எவை?
1. மின்னூல்களை வேர்ட் வடிவில் உருவாக்க வேண்டும். கூகுளில் கணக்கு வைத்திருந்தால் அதன் இலவச சேவையே போதுமானது இவ்விதமான வேர்ட் வடிவக் கோப்பினை உருவாக்குவதற்கு. கூகுள்டொக்ஸ் மூலம் மிகவும் இலகுவாக நீங்கள் வேர்ட் கோப்பொன்றை உருவாக்கலாம். அக்கோப்பில் பக்க இலக்கம், உள்ளடக்க விபரங்கள் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கூகுள் டொக்ஸ் பாவிப்பதற்குரிய இணையத்தளம் - https://docs.google.com/document/u/0/
2. அமேசன் - கிண்டில் தளத்தில் இவ்விதம் உருவாக்கப்பட்ட மின்னூல்களை வெளியிடலாம். அட்டை வடிவமைப்பை அத்தளத்தின் மூலமே மிகவும் இலகுவாக வடிவமைக்கலாம். இதற்குரிய இணையத்தளம் - https://kdp.amazon.com/ இவ்விதம் உருவாக்கப்பட்ட மின்னூல்களை அமேசன் தளத்தில் விற்க முடியும். மின்னூல்களை உருவாக்கும்போது கேள்விகளுக்கான உரிய பதில்களைக்கொடுப்பதன் மூலம், இது சாத்தியமாகின்றது.
3. அட்டைப் படத்துக்கான ஓவியத்தை ஏதாவது செயற்கை அறிவுத் தளம் மூலம் உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு chatGPT இன் இலவச சேவை மூலமும் இவ்விதமான ஓவியங்களை மிகவும் அழகாக உருவாக்க முடியும். இவ்விதம் உருவாக்கப்பட்ட ஓவியங்களை அமேசன் - கிண்டில் மின்னூல்களாக உருவாக்கும்போது பாவிக்கலாம். chatGPT இணையத்தளம் - https://chatgpt.com/
எழுத்தாளர்களே1 உங்களது பிரதான நோக்கம் - உங்கள் படைப்புகளை அதிகம் பேர் வாசிக்க வேண்டும் என்பதுதான். இவ்விதம் உருவாக்கப்பட்ட மின்னூல்களை இணையக் காப்பகம் , நூலகம் போன்ற தளங்களில் ஆவணப்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் படைப்புகளைப் பலர் வாசிக்கும் சாத்தியம் ஏற்படும். மேலும் முகநூல் , வலைப்பதிவுகள் போன்றவற்றில் அவை பற்றிய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதன் மூலம் பலரை உங்கள் படைப்புகள் சென்றடையும் சாத்தியமுண்டு. மேலும் உங்கள் படைப்புகள் காலத்தைக் கடந்து டிஜிட்டல் வடிவில் நிலைத்து நிற்கும் சந்தர்ப்பத்தையும் இது வழங்குகின்றது.
முதலில் உங்கள் நூல்களை எவ்விதச் செலவுமின்றி மின்னூல்களாக்குங்கள். எண்ணிம நூலகங்களில் ஆவணப்படுத்துங்கள். இதனை முதலில் செய்யுங்கள். பின்னர் விரும்பினால் வசதியும், வாய்ப்பும் ஏற்படும்போது அவற்றை அச்சு வடிவில் கொண்டுவாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -
[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.] தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்க...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
No comments:
Post a Comment