Thursday, January 30, 2025

பெரியார் சிந்தனைகள் - தொகுப்புகள்! பதிப்பாசிரியர் - வே.ஆனைமுத்து! பதிப்பகம் - சிந்தனையாளர் கழகம்!


ஈ.வெ.ரா பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள் 

ஈ.வெ.ரா பெரியார் பெரும் சிந்தனையாளர். வர்க்கம், வர்ணம், மூட நம்பிக்கைகளால் சிதைந்து கிடக்கும் உலகில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமநீதி, பெண் உரிமைகளுக்காக இருந்தவரை தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் குடியரசு, விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் பிரமிப்பைத்தருகின்றன. அவரது சிந்தனையின் ஆழத்தைக் காட்டுகின்றன.

பெரியாரின் சிந்தனைகளை அப்படியே யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரை விமர்சிப்பவர்கள் அவர் எழுத்துகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.அதற்குப்பின் அவற்றின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். அவற்றைப் படிக்காமல், அறியாமல் அவர் மீது சேற்றை வாரியிறைக்காதீர்கள்.

 

அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் இணையக் காப்பகத்திலுள்ளன. அவற்றை முதலில் வாசியுங்கள். அதன் பின் அவரை விமர்சியுங்கள். தேசியம், திருமணம், பெண் சமத்துவம், தீண்டாமை, மூட நம்பிக்கை பற்றிய அவரின் கருத்துகளை இத்தொகுப்புகளில் நீங்கள் வாசிக்கலாம். அத்தொகுப்பொன்றிலிருந்து சில பக்கங்களை இங்கு நீங்கள் வாசிப்பதற்காகப் பகிர்ந்துள்ளேன்.

மேற்படி தொகுப்புகளைக்  கீழுள்ள இணைய முகவரியில் வாசிக்கலாம். இவற்றை வாசித்தால் நீங்கள் பெரியார் என்னும் ஆளுமையினைச் சரியாக விளங்கிக்கொள்வீர்கள். அவரது கருத்துகளை  நீங்கள் ஏற்கின்றீர்களோ இல்லையோ , அவரைப்பற்றி முழுமையாக அறியாமல், நுனிப்புல் மேய்ந்துகொண்டு, சில சொற்களை எடுத்துச் சொற் சிலம்பம் ஆடாதீர்கள். அது உங்கள் அறியாமையையே வெளிப்படுத்தும்.

ஈ.வெ.ரா பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள்





  


No comments:

பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி -   *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...

பிரபலமான பதிவுகள்