Wednesday, January 1, 2025

ஜிம்மி கார்ட்டரும் மானுட நேயமும்


எனக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதிகள் மூவர். ஆபிரகாம் லிங்கன், ஜோன் எஃப் கென்னடி, அடுத்தவர் ஜிம்மி கார்ட்டர்.  ஜிம்மி கார்ட்டரின் ஜனாதிபதிப் பதவிக்காலம் ஒரு தடவைதான் என்றாலும் அவர் வரலாற்றில் நினைவு  கூரப்படுவது அவரது ஜனாதிபதிக்காலத்துக்கு அப்பால் அவர் செயற்பட்ட வாழ்க்கை முறை மூலம்தான். Habitat for Humanity அமைப்பு மூலம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் பணியில் அவர் தளராது தொடர்ந்து ஈடுபட்டார். தானே நேரடியாகக் களத்தில் இறங்கி வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். போர்ச்சூழல்கள் நிறைந்திருந்த உலகில் அமைதியை வேண்டி நடந்த நிகழ்வுகளில் சமாதானத்தூதுவராகப் பங்கு பற்றினார். இவை அவரது முக்கிய பங்களிப்புகளாக நான் கருதுவேன்.

  

அவர் ஜனாதிபதியானபோது வெளீயிட்ட கட்டுரையில் அவரை வேர்க்கடலை விவசாயி என்று கல்கி சஞ்சிகை குறிப்பிட்டபோது படித்து வியந்திருக்கின்றேன். அப்பொழுது அவரை எம்மூர் விவசாயி ஒருவரின் நிலையில் கற்பனை செய்ததுதான் அவ்வியப்புக்குக் காரணம்.

100 வயது வரை வாழ்ந்திருக்கின்றார். நிறைவான வாழ்க்கை. சக மானுடருக்கு உதவும்  பணிகள் நிறைந்த வாழ்க்கை. எப்பொழுதும் வசீகரம் மிக்க சிரிப்புக்குச் சொந்தக்காரராக விளங்கியவர் ஜிம்மி கார்ட்டர். வரலாற்றில் அவர் ஆற்றிய மனித நேயச் சேவைகள் மூலம் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார்.

 - கல்கி சஞ்சிகைக்  கட்டுரையிலிருந்து..-

 

 


No comments:

தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!

திராவிடம் என்னும் சொல் தமிழம் த்ரமிளம், த்ரவிடம், திரவிடம்,  திராவிடம் என்னும் வட சொல்லாக மீண்டும் தமிழுக்கு வந்த சொல்.இந்தியாவின் பூர்வ குட...

பிரபலமான பதிவுகள்