Monday, January 6, 2025

ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்?'


எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது ஆசிய ஜோதி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, திரைக்கதை , வசனம் எழுதி வெளியிட்ட திரைப்படங்கள் உன்னைப்போல்  ஒருவன் & யாருக்காக அழுதான்.இரு குறுநாவல்களுமே ஆனந்த விகடனில் வெளியானவை.

யாருக்காக அழுதான் நடிகர் நாகேஷின் நடிப்பை வெளிப்படுத்திய சிறந்த திரைப்படங்களில் ஒன்று. நாகேஷ் யோசெப்பு என்னும் பாத்திரமாகவே மாறிவிட்டார். படத்தை இறுதிவரை பாருங்கள். இறுதியில் யோசேப்பு அழுவான். யாருக்காக அவன் அழுவான்? ஆனால் நீங்கள் நிச்சயம் யோசெப்புக்காக அழுவீர்கள் என்பது  மட்டும் நிச்சயம். என்னைப்பொறுத்தவரையில் இப்படத்தின் நாகேஷின் நடிப்புக்காக நிச்சயம் சிறந்த நடிகருக்கான விருதுகள் பல கிடைத்திருக்க  வேண்டும்.
அறுபதுகளில் இப்படியொரு திரைப்படத்தைத்  தமிழ்த்திரையுலகு தந்திருக்கின்றது. பெருமைப்படத்தக்க விடயம்.  சாத்தியமாக்கிய ஜெயகாந்தன் பாராட்டுக்குரியவர்.யாருக்காக அழுதான் திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் அமரர் எஸ்.வி.ரமணன்.  நர்த்தகி பத்மா சுப்பிரமணியத்தின் சகோதரர். பழம்பெரும் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகன்.

ஜெயகாந்தன் தன் எழுத்துகள் வணிகத் திரைப்படங்களாக அமைந்து வெற்றியடைய வேண்டுமென்பதற்காகச் சமரசம் செய்யாத இலக்கிய ஆளுமை. இந்த விடயத்தில் அவர் தனித்துவமானவர்.


ஜெயகாந்தனின் தமிழ்த்திரையுலகப் பங்களிப்பு முக்கியமானது மட்டுமல்ல வளம் சேர்ப்பதுமாகும்.

காவல் தெய்வம் - இயக்கம் கே.விஜயன்
உன்னைப்போல் ஒருவன் -  கதை, வசனம் 7 இயக்கம் - ஜெயகாந்தன்
யாருக்காக அழுதான்?  - கதை, வசனம் 7 இயக்கம் - ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - இயக்கம் பீம்சிங்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் -  இயக்கம் பீம்சிங்
ஊருக்கு நூறு பேர் - இயக்கம் - பி.லெனின் (பீம்சிங்கின் மகன்)  - சிறந்த இயக்கம், சிறந்த படம் ஆகியவற்றுக்காகத் தேசிய விருதுகள் பெற்ற திரைப்படம்.

இவையெல்லாம் திரைப்படமான ஜெயகாந்தனின் புனைகதைகள்.

திரைப்படத்தைப் பார்க்க - https://www.youtube.com/watch?v=CygM_rn7lWQ

No comments:

எழுத்தாளர் இரா முருகனின் எம்.டி.வாசுதேவன் நாயருடனான 'தீராநதி' நேர்காணலும் , அவரது 'நாலுகெட்டு' நாவலின் நாயகி பற்றிய கேள்விகளும், வாசுதேவன் நாயரின் பதில்களும், என் குழப்பங்களும் பற்றி...! - வ.ந.கிரிதரன்.

எழுத்தாளர் இரா முருகன் அமரர் எம்.எடி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு 2009இல் வந்திருந்த போது நேர்காணலொன்று எடுத்திருந்தார். அந்நேர்காணல் தீராநதிய...

பிரபலமான பதிவுகள்