Wednesday, January 1, 2025

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.!


இத்தரையில் மீண்டுமோர் ஆண்டு பிறந்தது.
எத்திக்கும் நிறையட்டும் இன்பப் பெருவெள்ளம்.
வெள்ளத்தில் நீந்திக் கிடப்போம். எமைமறப்போம்.
உள்ளத்தில் உவகை ஊறட்டும். பெருகட்டும்.

உலகின் உயிர்கள் அனைத்தும் இன்புற்று
கலகலப்பாக இருந்திடட்டும் என்றே வாழ்த்துவோம்.
நலம் மிகுந்தே இருப்பைத் தொடரட்டும்.
அவை என்றே அகமகிழ்ந்து வேண்டிடுவோம்.

போர்கள் ஒழிந்து துயரம் ஒழியட்டும்.
பாரில் அமைதி எங்கும் பூக்கட்டும்.
மானுடப் பேதங்கள் மறையட்டும், உலரட்டும்.
தேன் சிந்தும் மலராகட்டும் வாழ்வு.

புத்தாண்டே இங்கு வந்து  பிறந்தாய்.
சித்தத்தை நீ மகிழ்வால் நிறைத்தாய்.
புவியியெங்கு வாழுமெம் உறவுகளே! அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு வாழ்த்துகள்.

No comments:

ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்! - நந்திவர்மப் பல்லவன் -

பதிவுகள் இணைய இதழில் வெளியான நந்திவர்மப் பல்லவனின் கட்டுரை. ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும்!  - நந்திவர்மப் பல்லவன் - தென்னிந்தியத் தமிழ...

பிரபலமான பதிவுகள்