அமரர் எம்.டி. வாசுதேவன் நாயரின் ஆளுமை பற்றி முகநூலில் ஒரு விவாதம்! முன்னெடுக்கின்றார் உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா. பதிவுகள் இணைய இதழில் வெளியான இப்பதிவைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
முகநூலில் துணைப்பேராசிரியர் ஜே.பி.ஜோசபின் பாபா அவர்கள் (இப்பொழுது இவர் பேராசிரியராக இருக்கக் கூடும். விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்) அமரர் எம்.டி. வாசுதேவன் நாயர் பற்றிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்திருந்தார். அவை பற்றி நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களில் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு தருகின்றோம். உங்கள் கருத்துகளையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
ஜே.பி.ஜோசபின் பாபா J P Josephine Baba
ஒரு நாள் தனது குடும்பத்தின் எதிர்ப்பை புறக்கணித்து விட்டு எழுத்தாளருடன் வாழத் துவங்குகிறார். கணவனின் எழுத்தை ஆங்கிலத்தில் கொண்டு வரும் பாரிய பணியில் இருக்கிறார்.எழுத்தாளருக்கு குடி, நட்புகள் என தனது வெளி விசாலமாகிறது. சாகித்ய அக்காதமி துவங்கிய பல விருதுகளை சொந்தமாக்குகிறார். அவருடைய சமூக புகழ் நிலை உயர்கிறது. 11 வயது மகளுக்கு நடனம் கற்பிக்க ஏழையான கலாமண்டலம் சரஸ்வதி வீட்டுக்கு அழைக்கப்படுகிறார். பின்பு எழுத்தாளரின் குடியிருப்பு சரஸ்வதி வீட்டுக்கு இடம் மாறுகிறது. மனைவியையும் மகளையும் முற்றிலும் மறந்து, தன்னை நிறுவ தனது எழுத்திலும் சினிமாவிலும் தனது மனைவிக்கு தான் அடைக்கலம் கொடுத்தது மாதிரி கதை எழுதுகிறார். படம் எடுக்கிறார்.( திரைப்படம் அக்ஷரங்கள் ) எழுத்தாளரின் மனைவி பிரமிளாவும் தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதும் நிலைக்கு தள்ளப்படுகிறார். பிற்பாடு வழக்காடு மன்றத்தில் தனது கணவர் தனக்கு வேண்டும் என மனைவி கெஞ்சியும் மனைவியும் மகளும் வேண்டாம் என எழுத்தாளர் சரஸ்வதியுடன் இணைந்து கொள்கிறார். எழுத்தாளரின் மனைவியையும் மகளையும் மனைவியின் சகோதரர் அமெரிக்க அழைத்து செல்கிறார்.
முழுமையாக வாசிக்க - https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/8872-2024-12-28-20-26-06
மனத்துயரில் இருந்த மனைவி பல நோய்களுக்கு உள்ளாகுகிறார். கடைசியில் கேன்சர் நோய் சிகித்சையில் கடைசி நாட்களில் இருக்கும் போது தனது கணவனை காண விரும்கிறார், வேண்டுகிறார். ஆனால் கதைகளில் அன்பு காதல் கனிவு என்று எழுதி விருது பெற்றவரால் மனைவிக்கு நிம்மதியான ஒரு மரணத்தை கூட கொடுக்க இயலவில்லை. தனது 44 ஆம் வயதில் 26 வயது நடன டீச்சருடன் வாழும் போது சொந்த மனைவி தன்னை விட மூன்று வயது பெரியவர் என்பது இளகாரமாக தெரிகிறது. ஆனாலும் ஆண் என்பதால் பல விருதுகள், ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் பெயர் அடிபட்டும் பிரபலம் என்பதால் தனிநபர் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நேர்மையை பற்றி கேள்வி இல்லை , 91 வயதில் அரசு மரியாதையுடன் MT போயுள்ளார் என மலையாளம் ஒரு பகுதி இலக்கிய உலகம் விவாதித்துக் கொண்டு இருக்கிறது. மனித உறவுகளை, காதல் அன்பு என்ற இயபல்பான உணர்வுகளை தன்னுடைய சுயநல ஆசைகளுக்காக பயன்படுத்தும் toxic இலக்கிய ஆண்களில் ஒருவரான MT யை காண முதல் மகள் வந்து இருந்தாரா என தெரியவில்லை.
இதில் சரஸ்வதி, தான் ஒரு தியாக சுடராக சொல்லிக் கொண்டு பல நேர்முகங்களை கொடுத்து வருவது தான் முரணாக உள்ளது. ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு ஆணை எடுத்துக் கொண்டு போவதின் அரண் தான் என்ன? ஆனால் புகழ வெளிச்சத்தில் உள்ள ஆண்களுக்கு எல்லாம் எளிதாக உள்ளது.
நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)
நீங்கள் ஒருவரின் வாழ்க்கையின் நிகழ்வுகளின் அடிப்படையில் அவர் பற்றிய எண்ணங்களை உருவாக்குகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் இவ்விதம் முடிவெடுப்பதற்கு ஆதாரங்கள் உண்டா? எம்.டி.வாசுதேவன் நாயருக்கும், அவரது முதல் மனைவிக்குமிடையில் ஏன் பிரிவு வந்தது? அது பற்றிய போதிய விபரங்கள் உங்களிடம் உள்ளனவா? மணமுறிவு என்பது பல்வேறு காரணங்களினால் ஏற்படலாம். அவை பற்றி எதுவும் தெரியாமல் நீங்கள் இவ்விதம் எழுத்தாளரைக் குற்றஞ்சாட்டுகின்றீர்கள். மேலும் சட்டரீதியாக மண முறிவு பெற்றவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டிய தேவை இல்லை. முதல் மனைவியின் இறுதிப்படுக்கையில் வாசுதேவன் நாயர் சென்று சந்திக்க வேண்டிய தேவை இல்லை. விரும்பினால் செல்லலாம். ஆனால் அவசியமில்லை. இதை ஒரு குற்றமாக எடுத்து எழுத்தாளரைச் சாடுகின்றீர்கள். அவர் முதல் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்ட பின்பே இரண்டாவதாக மணம் முடித்தார். முடித்தவர் புகழ்பெற்ற நர்த்தகி. அவரையும் தரக்குறைவாக விமர்சிக்கின்றீர்கள்.
ஜே.பி.ஜோசபின் பாபா J P Josephine Baba
Navaratnam Giritharan நான் மலையாளம் வாசிப்பவர் செய்திகள் கேட்ப்பவர். சும்மா காது வழி செய்தியை எழுதவில்லை. தமிழ் இலக்கிய வெளி மாதிரி மலையாளம் இலக்கிய வெளி புனித பிம்பம் கட்டமைப்பது இல்ல. அவர்கள் பகுதாய்ந்து தகவல்கள் தருகிறவர்கள்.இதில் தரம் தாழ என்ன இருக்கு. அவர்கள் முதல் மனைவி பற்றி சொல்லாவிடிலும் ஊர் உலகம் அவதானித்து சொல்கிறது. இரண்டாம் மனைவி பற்றிய பரிவு முதல் மனைவிக்கும் இருக்கும் தானே. அவர் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டார் என்பதற்காக அவர் பக்கம் யாரும் பேசக்கூடாது என்ற நியதி உண்டா?
இதற்காக உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா காட்டும் ஆதாரம் ஒரு யு டியூப் சானல். அதுவும் வாசுதேவன் நாயர் மறைந்ததன் பின் பதிவேற்றப்பட்ட காணொளியைக்கொண்டது. - https://www.youtube.com/watch?v=X6cP7-3Jh_Q
நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)
J P Josephine Baba // சும்மா காது வழி செய்தியை எழுதவில்லை. // ஆதாரங்கள், ஆய்வுக் கட்டுரைகள் உண்டா? யு டியூப் சானல்களில் கூறுவதையெல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதல் மனைவி சட்டரீதியாக விவாகரத்து பெற்றவர். அத்துடன் அவரது தொடர்பு வாசுதேவன் நாயரின் வாழ்வில் முற்றுப்பெற்று விட்டது. அது கூட ஏன் நடைபெற்றது என்பதற்கு எமக்கெல்லாம் சரியான காரணங்கள் தெரியாது. வாசுதேவன் நாயரோ கலை, இலக்கியவாதி. இவர்கள்தம் நிலை காரணமாக அவர்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டனவா நாம் அறியோம். இந்நிலையில் ஒருவர் மறைந்தபின்னர் இவ்விதம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகவல்கள் உங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால், வாசுதேவன் நாயர் உயிருடன் இருந்திருக்கும் காலத்திலேயே கூறியிருக்க வேண்டும். விமர்சித்திருக்க வேண்டும். ஏன் இவ்வளவு காலம் அவர் மறையும் வரையில் காத்திருந்தீர்கள்? நீங்கள் குறிப்பிடும் யு டியூப் சானலும் அவர் மறைந்த பின் பதிவேற்றப்பட்ட ஒன்றுதான். நீங்களோதான் பல்கலைக்கழகப் பேராசிரியர். நீங்கள் இதுபோன்ற யு டியூப் சானல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றையெல்லாம் ஆதாரங்களாகக் கொள்வது ஆச்சரியம் தருகின்றது.
நீங்கள் தரக்குறைவாக விமர்சிக்கும் வாசுதேவன் நாயரின் மனைவி சரஸ்வதி இவர்தான். புகழ்பெற்ற நர்த்தகி. பல விருதுகளைத் தனது கலைப்பங்களிப்புக்காகப் பெற்றவர். நாட்டியப்பள்ளியை உருவாக்கியவர். http://nrityalaya.net/kalamandalam-saraswathy/ வாசுதேவன் நாயர் தனது இரண்டாவது மனைவியுடன் 47 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றார். அந்த இல்லறப்பிணைப்பைக் கொச்சைப்படுத்துகின்றீர்கள்?
எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)
நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)
Athanas Jesurasa வணக்கம் திரு.யேசுராசா, உங்களிடமிருந்து இத்தகைய எதிர்வினையொன்றினை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வாசுதேவன் நாயருக்கும் முதல் மனைவிக்குமிடையிலான பிணைப்பு 11 வருடங்கள். இரண்டாவது மனைவியுடனான பிணைப்பு 47 வருடங்கள். முதல் மனைவி எப்பொழுது இறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் முறையாக விவாகரத்துப் பெற்ற ஒருவர், இன்னுமொருவருடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட ஒருவர் தன் முதல் மனைவியின் கடைசிக் காலத்தில் சென்று பார்க்கவில்லை என்பதால் அது மனிதாபிமானமில்லை என்று கூறுவது ஆச்சரியத்தைத் தருகின்றது. செ.யோகநாதனின் நிலையை எதற்காக இங்கு ஒப்பிடுகின்றீர்கள்? வாசுதேவன் நாயரின் இல்லத்தின் பெயர் சித்தாரா. அது அவரது முதல் மனைவிக்குப் பிறந்த மகளின் பெயர்.
ஜே.பி.ஜோசபின் பாபா J P Josephine Baba
நரேந்திர குமார்
J P Josephine Baba
இதெல்லாம் ரொம்ப மிகையான கூற்று.. இத்தனை ஆழமாக போனால் நாம் தினத்தந்திதான் வாசிக்க முடியும்.. விக்ரமன் படம்தான் பார்க்க முடியும்..
நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) Navaratnam Giritharan
நரேந்திர குமார் //ரொம்ப மிகையான கூற்று// மிகையான கூற்று மட்டுமல்ல. யு டியூப் சானலை ஆதாரமாகக் கொண்ட ஆதாரங்களற்ற கூற்று.
நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) Navaratnam Giritharan
இன்றுள்ள பிரெஞ்சு அதிபர் தன்னை விடப் பல வருடங்கள் மூத்த பெண்ணை மணம் செய்தவர். அதிபர் பிறந்தது 77இல். மனைவி பிறந்தது 53இல். 24 வயது மூத்தவர் மனைவி.
நரேந்திர குமார்
ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் இவர் பெயர் அடிபட்ட நினைவில்லை..
எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)
// கடைசியில் கேன்சர் நோய் சிகித்சையில் கடைசி நாட்களில் இருக்கும் போது தனது கணவனை காண விரும்கிறார், வேண்டுகிறார். ஆனால் கதைகளில் அன்பு காதல் கனிவு என்று எழுதி விருது பெற்றவரால் மனைவிக்கு நிம்மதியான ஒரு மரணத்தை கூட கொடுக்க இயலவில்லை. // - அதிர்ச்சியும் சங்கடமும் அடைந்தேன் ; இவர், நான் மிகவும் விரும்பும் மலையாள எழுத்தாளராக இருந்தார்!
ஜே.பி.ஜோசபின் பாபா J P Josephine Baba
Athanas Jesurasa இதே மாதிரி தான் சுகுமார் அழிகோடும் இருந்தார்.கோழைகள்
நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)
//மனைவிக்கு நிம்மதியான// 11 வருடங்கள் வாழ்ந்த முன்னாள் மனைவி. மனைவி அல்லர். அதன்பின்னர் வாசுதேவன் நாயர் தனது இரண்டாவது மனைவியுடன் 47 வருடங்கள், மறையும் வரை வாழ்ந்திருக்கின்றார்.
எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)
J P Josephine Baba ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி விரிவான கட்டுரையை எழுதி வெளியிடுங்கள் ; அது முக்கியமானதொன்றாகும்!
நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்)
Athanas Jesurasa // ஆனாலும் ஆண் என்பதால் பல விருதுகள், ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டில் பெயர் அடிபட்டும் பிரபலம் என்பதால் தனிநபர் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நேர்மையை பற்றி கேள்வி இல்லை// என்று இப்பதிவாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டிற்கான இணைப்பு - https://www.livelaw.in/.../hema-committee-report-556457.pdf நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசிக்கும்போது மேலுள்ள குற்றச்சாட்டு உண்மையா என்பதையும் அவதானிப்பேன். நீங்கள் முதலில் வாசித்தால் பதிவு செய்யுங்கள்.
எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)
Navaratnam
Giritharan // இன்னுமொருவருடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட ஒருவர்
தன் முதல் மனைவியின் கடைசிக் காலத்தில் சென்று பார்க்கவில்லை என்பதால் அது
மனிதாபிமானமில்லை என்று கூறுவது // - புற்று நோயில் துன்புறும் தனது
இறுதிநாள்களில், கணவனைச் சந்திக்க விரும்பித் தகவல் தெரிவித்தபோது அவர்
மறுத்தார் என்ற முக்கிய தகவலை நீங்கள் தவறவிடுகிறீர்கள்! ; அதுதான்
வாசுதேவன் நாயரின் மனிதபிமானமற்ற செயல் என்னும் குற்றச்சாட்டாக மாறுகிறது!
எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)
Athanas Jesurasa //. சக மனிதர்மீதான அக்கறை, மனிதநேயம் என்றெல்லாம் தமது படைப்புகளில் கொட்டிக்குவிக்கும் எழுத்தாளரான // வாசுதேவன் நாயர் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்த பின்னரே இரண்டாவதாக மணம் செய்தார். இரன்டாவதாக மணம் செய்தவருடன் 47 வருடங்கள் வாழ்ந்தார். அவர் தன் முதல் மகள் சித்தாரா மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அதன் காரணமாகவே வீட்டுக்கும் முதல் மகள் பெயரை வைத்தார். முதல் மனைவியுடன் ஏன் விவாகரத்து ஏற்பட்டது என்பதை நீதிமன்றத்தின் விவாகரத்துக் குறிப்புகள் தாம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நவயுகத்தில் விவாகரத்து என்பது பலரின் உணர்வுகளைப் பாதிப்பதாகவிருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. விவாகரத்து முடிந்த ஒருவர் , இன்னுமொருவருடன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட ஒருவர் முதல் மனைவியின் இறுதிக்காலத்தில் சென்று பார்க்கவில்லை என்பதை வைத்து அவரது மனிதாபமிமானத்தை எடை போடுவது சரியாகத் தெரியவில்லை. எங்களுக்குத் தெரியாது அவர்களுக்கிடையில் இருந்த பிளவுகளின் ஆழம். யு டியூப்காரரின் கூற்றுகளின் அடிப்படையில் ஒருவர் கருத்துகளை முன் வைக்கின்றார். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு உங்கள் கருத்துகளை முன் வைக்கின்றீர்கள். இதை ஏற்றுக்கொள்வதில் எனக்குச் சிரமம் உண்டு. ஆனால் வாசுதேவன் நாயர் தன் மூத்த மகள் விடயத்தில் தன் கடமையைச் செய்ததாகவே கட்டுரையொன்றின் மூலம் உணர முடிகின்றது. மூத்த மகளும் தந்தையுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவே தெரிகிறது. https://indiapresentinfo.in/2024/12/sithara-vasudevan-nair-biography.html
எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)
Athanas Jesurasa //புற்று நோயில் துன்புறும் தனது இறுதிநாள்களில், கணவனைச் சந்திக்க விரும்பித் தகவல் தெரிவித்தபோது அவர் மறுத்தார் என்ற முக்கிய தகவலை நீங்கள் தவறவிடுகிறீர்கள்! // இந்தத்தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்? முதல் மனைவி எப்பொழுது இறந்தார்? விவாகரத்து பெற்று எத்தனை வருடங்களின் பின்னர் அவரது மரணம் சம்பவித்தது? இவற்றைப்பற்றிய தகவல்களைத் தர முடியுமா?
எழுத்தாளர் அ.யேசுராசா (Athanas Jesurasa)
No comments:
Post a Comment