Monday, December 9, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - உலகக் கவி கணியன் பூங்குன்றனார்


உலகக் கவி கணியன் பூங்குன்றனார்


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்எல்லைகள் அற்ற உலகை வேண்டினான்.
நல்லதை நினைத்தான். நாம் அனைவரும்
பூமித்தாய்ப் புதல்வர் புதல்வியர் என்றே
எண்ணினான் அதை எழுத்தில் வடித்தான்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

உலகத்து மானுடர் நாம் உறவினர்
உள்ளத்தில் வைப்போம் என்றான் நம்பினான்.
உள்ளம் பரந்ததை வெளிப்படுத்தும் கூற்று
உண்மை இதை மனத்தில் வைப்போம்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஓயாது பெருங்குரலில் எடுத்துக் கூறுவோம்.
தீது ஒழியும் நன்று மலரும்
பிரிவு அற்ற உலகு விரியும்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்