Sunday, December 22, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால்  குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.

நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

திருடிய குதிரைகளைத் தந்திரமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய
அல்லது திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நோயால் துவண்டவை அல்ல.
அவை நல்லவை.
அவை வல்லவை
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.

குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.

நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

No comments:

மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!

நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra ) எழுதிய் புகழ் பெற...

பிரபலமான பதிவுகள்