Saturday, December 7, 2024

வ.ந.கிரிதரன் பாடல்- களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'


களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'

இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI

நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்

இன்பமூட்டும் சொற்கள், எழுத்துகள் , அசைவுகள்
என்றுமே வாழ்வுக்கு இன்பம் தருபவை.
நன்று அவை என்போம் நம்புவோம்
நம்பிக்கை எப்பொழுதும் பயனைத்  தருமே.

நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்

கணப்பொழுதில் மின்னல் ஒளிவீசும் மறையும்.
கணப்பொழுதே நம் இருப்பும் பிரபஞ்சத்திலே.
அண்டத்தின் வாழ்வுடன் ஒப்பிட்டும் பார்த்தால்
அறியலாம் இருப்பின் காலத்தின் தன்மையினை.

நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்

ஒளிரும்  இருப்பாக  எம்மிருப்பு இருக்கட்டும்.
ஒளிர்வோம் பயன்மிகு இருப்பாக  இருப்போம்.
களிப்புப் பூக்களை எங்கும் மலர்விக்கும்
கதிராக எம் ஒளிர்தல் அமையட்டும்.

நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்



No comments:

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்