Tuesday, September 16, 2025

முற்றாத இரவில் முற்றாத காதலால் வாடும் மானுட உள்ளங்கள்!

- கவிஞர் கண்ணதாசன் -

"முற்றாத இரவொன்றில் நான் வாட.. 
முடியாத கதை ஒன்று நீ பேச..
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட.. 
உண்டாகும் சுவையென்று ஒன்று..

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன் 
விழி மட்டும் தனியாக வந்தாலும்..
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று.. 
பெறுகின்ற சுகமென்று ஒன்று".
.  - கவிஞர் கண்ணதாசன் -

இவ்விதம் எளிமையான சொற்றொடர்களில் ,  அனுபவத்தில் தோய்ந்த  காதல் போன்ற மானுடர்தம்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறந்தவர் கவிஞர் கண்ணதாசன்.  

'முற்றாத  இரவு' அற்புதமான படிமம். முற்றாத என்னும் சொல்லை நாம் இரு வகைகளில் தமிழில் பாவிக்கின்றோம். ஒரு விடயம் முடிவுக்கு வராத விடயத்தைக்குறிக்கப் பாவிக்கின்றோம். அதே சமயம் முற்றாத கனி என்றும் பாவிக்கின்றோம்.  

இரவு நீண்டிருக்கின்றது. முடிவற்று விரிந்து கிடக்கின்றது. முடிவற்ற கனியாகவும் இருக்கின்றது இரவு. இந்த இரவில் அவனது காதல் உணர்வுகளுக்குத் தீர்வுமில்லை. முடிவுமில்லை. எவ்வளவு சிறப்பாகக் கவிஞர் கண்ணதாசன் முற்றாத இரவு சொற்றொடர் மூலம் காதலால் வாடும் அவனது  உள்ளத்தை, அதே சமயம் கனியாத, முற்றாத அவனது காதலின்  தன்மையை வெளிப்படுத்துகின்றார். கனியாத, முடிவுக்கு வராத அவனது காதலுணர்வுகள் அவனை வாட்டுகின்றன அந்த முற்றாத இரவைப்போல்.   

'பதிவுகளி'ல் அன்று - கனடா - 12வது அரங்காடல்! & கருமையம்: நிறைவைத் தந்த முதல் நிகழ்வு! - தான்யா -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

ஏப்ரல் 2005 இதழ் 64
கனடா - 12வது அரங்காடல்! 

நான் 98 இல் பார்த்த அரங்காடலைப்பற்றிய மனப்பதிவு மிகவும் அற்புதமாய் இருந்தது.  இன்றும் அந்த உணர்வு தந்த பாதிப்பிலேயே அரங்காடல் பார்த்து வருகிறேன்.  நல்ல நாடகங்கள் நல்ல நடிப்பு எல்லாவற்றிலும் ஒரு முழுமையை பேணிய காலம் அது.  இன்று மிகவும் மலிவான இரசனையை மக்களிடம் புகுத்தி பணம் பண்ணும் முயற்சியாகவே அரங்காடல் இருக்கிறது.  நிறைய நடிகர்கள், பற்றாக்குறையின்றி நடிக்கும் நல்ல நடிகைகள் என்று முன்னோக்கி வந்த போதும்.  நல்ல தரமான நாடகப் பிரதியாளர்கள் இன்றி 'வெறும்' நாடகங்களாய் மட்டுமே ஆகி விட்டது.  1999 ஆம் ஆண்டில் 10க்கு மேற்பட்ட நடிகர் நடிகைகளைக் கொண்டு மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கத்தின் 'அன்னையிட்ட தீ' அப்போதைய அமைதியற்ற சூழலில், போரால் ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகளை எடுத்து வந்து 'அன்னை இட்ட தீ', பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஆட்கொண்டது. வழமையான பழமைவாத கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அது மீள்பிரதியாக்கம் செய்யப்பட்டபோது தனித்துவமாய் இருந்தது.  2005 இல் அரங்காடல் தன் பேரை மட்டுமே தன்னகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மறுபடியும் குழந்தை சண்முகலிங்கத்தின் 'நரகோடு சுவர்க்கம்" என்ற நாடகம் மேடையேறியிருக்கிறது. அதை நான் பிரதியாய் வாசித்ததில்லை ஆதலால் நாடகத்தில் என்ன மாற்றம் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லமுடியவில்லை.  ஆனால் இன்றைய காலத்திற்குப் பொருந்தாமல் இடப்பெயர்வு செல் அடி போன்றவையை மேடையில் பார்த்தபோது, பார்வையாளர்களிடத்தில் சலிப்பைத்தான் காணமுடிந்தது. 'இந்த நேரத்தில் எதற்கிந்த நாடகம்' என்ற எரிச்சலைத் தவிர வேறெந்த உணர்வும் வரவில்லை.  நாடகத்தில் இடம்பெயர்ந்துபோனவர்கள், திரும்பி வந்து தங்கள் வீட்டை வர்ணிக்கையில், 'எங்கட வீடு கற்பழிக்கப்பட்டிருந்தது' என்கையில் வீட்டைப் பெண்ணாக ஒப்பிட்டிருப்பார்கள்.  இந்த பழைய கற்புசார் மதீப்பீடுகள் கொண்ட இந்த வசனத்தை மீள்பிரதியாக்கம் செய்தவர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், 'அரங்காடல்' போன்ற முற்போக்கின் பிரதிநிதிகளிடம், 'இவற்றை விமர்சிக்க வேண்டியிருக்கிறதே' என்பது அயர்ச்சி தருகிறது.  

முன்பெல்லாம் அரங்காடலைச் சேர்ந்தவர்கள் இந்த பள்ளிக்கூட ஒன்றுகூடல்கள் மற்றும் வானவில் திரையிசை நடனங்களை நக்கலடிப்பார்கள்.  குறிப்பாக ஊரைப்பற்றி எடுக்கும் நாடகங்களை அவர்கள் மிகவும் மோசமாக விமர்சிப்பார்கள்.  இன்று அவர்களே அந்த இடத்தில்தான் வந்து நிக்கிறார்கள்! சென்ற அரங்காடல்களைப் பற்றியும் இதே மாதிரியான மனப்பதிவே மிஞ்சுகிறது. இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்பு வந்த அரங்காடல்கள் தம் கலைத்தன்மையை முற்றாக இழந்து விட்டன. இனி என்கிற நம்பிக்கையும் போய்விட்டது.  வெறும் கேளிக்கையாகவும், அரங்காடல் என்பது ஒரு உயர்வர்க்கத்தினர் விழாவாகவும் ஆகிவிட்டது.

'பதிவுகளி'ல் அன்று - சுவிஸ் தமிழ் நாடகம்! & 'அல்ப்ஸ் கூத்தாடிகள்'! சுவிஸ் நாடகக் கல்லூரியின் தொடரும் சாதனை! - சி. அண்ணாமலை (சென்னை) -

- C. அண்ணாமலை -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

ஏப்ரல் 2005 இதழ் 64 
சுவிஸ் தமிழ் நாடகம்!

சுவிட்சர்லாந்து நாட்டு இயக்குநர்களும் நடிகர்களும் நமது தமிழ்க் கலைஞர்கள் பற்றியும் கலைகள் பற்றியும் சொன்னபோது வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது. தொடர்ந்து இருபது ஆண்டுகள் அந்த நாட்டில் தமிழர்கள் நாடகங்களை மேடையேற்றி வருகிறார்கள். குளிரும், கலாச்சாரமும், மொழியும் அந்நியமான சூழலில் தமிழ் நாடகா;கள் ஒரு சாதனையை நிகழ்த்த முடிந்திருக்கிறது. அங்கு 'எத்தனையோ இனம் அகதிக்கோலத்தில் வாழ்ந்திருந்தாலும் தமிழினத்தின் ஈடுபாடும் முயற்சிகளும் பிறரிடம் இல்லை" என்கிறார் அல்பின் பியாரி என்கிற சமூக மானுடவியல் ஆய்வாளர் மற்றும் நிதி நிறுவன அதிகாரி. 

மேலும் 'தமிழர்கள் சுவிஸ் நாட்டின் பெரிய நாடகக்குழுக்கள் அரங்கேற்றும் இடங்களில் தமிழ் நாடகங்களும்; டொய்ச் - தமிழ் படைப்புகளும் மேடையேறுவது அடுத்தகட்டமாக இருக்க முடியும்'  என்கிறார். எண்பதுகளின் தொடக்கம் உலகம் முழுவதும் தங்கள் விருப்பங்கட்கு மாறாய் வாழ நேர்ந்த ஈழத்தமிழர்கள், சுவிஸ் நாட்டிற்கு வந்தபோது குளிர்தான் பெரும் பிரச்னையாக இருந்திருந்தது. 'நான் நமது நாட்டுச்சூழலுக்கேற்ற உடையுடன் வந்திருந்தேன். குளிருக்கேற்ற எந்தவித உடுப்புகளுடனும் வரவில்லை. ஐஸ்கட்டிகளை எடுத்து விளையாடினேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை பின்னர் அதன் குணத்தை முழுதாய் உணர்ந்து நடுங்கினேன்' என்கிறார் அன்ரன் பொன்ராசா.

'பதிவுகளி'ல் அன்று - ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான்! ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி! - வெள்ளியம்பலம் -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

நவம்பர் 2006 இதழ் 83 -

ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான்! ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி!  - வெள்ளியம்பலம் -

ஒக்ரோபர் மாதம் 29 ந் திகதி மாலை ஸ்காபரோ சிவிக் சென்ரரில் 11.10. 2006 இல் தன் 72 வயதில் காலமான ஏ.ஜே.க்கு காலம் சஞ்சிகையினர் ஒழுங்கு செய்த அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. அதை என்.கே.மகாலிங்கம் நெறிப்படுத்தினார். கூட்டத்திற்கு ஏ.ஜே.யின் நண்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் ஏறக்குறைய எண்பது பேர் சமூகமளித்திருந்தனர்.

ஆங்கில -தமிழ், தமிழ் -ஆங்கில மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், நூல் மதிப்பீட்டாளர், பத்திரிகைபாளர், ஆங்கில ஆசிரியர் போன்ற அத்தனை முகங்களும் ஏ.ஜே.யின் மனிதம் என்ற முகத்தில் ஆழப் புதைந்தவை தாம் என்ற ரீதியில் தான் பேசிய அத்தனை பேரின் நினைவுகூறல்களின் சாராம்சம் இருந்தது.

Monday, September 15, 2025

'பதிவுகளி'ல் அன்று - அஜீவனின் 'எச்சில் போர்வை' குறும்படம் ஒரு பார்வை! & அஜீவனின் 'நிழல் யுத்தம்' ஒரு பார்வை! - சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி) -

- அஜீவன் (ஜீவன் பிரசாத்) -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

அண்மையில் மறைந்த பன்முக ஆளுமையாளரான அஜீவனின் 'எச்சில் போர்வை', 'நிழல் யுத்தம்' ஆகிய திரைப்படங்கள் பற்றி எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய இரு கட்டுரைகள். 

செப்டம்பர் 2003 இதழ் 45
அஜீவனின் 'எச்சில் போர்வை'  குறும்படம் ஒரு பார்வை!   

புலம்பெயர்ந்த உறவுகள் குறிப்பாக இளைஞர்கள் தாய்நிலத்தை மறந்து விட்டார்கள். தமது உறவுகளுக்குப் போதிய அளவு பணம் அனுப்புவதில்லை என்பது தாயக உறவுகளின் மனக்குறையும் புலம்பலும் என்றால், தாயக உறவுகள் கடிதம் போடுவதே பணத்துக்காகத்தான், எங்களை பணம் காய்க்கும் மரங்களாக அவர்கள் நினைக்கிறார்கள் என்ற மனக்குறையுடன் புலம்புகிறது புலம் பெயர்ந்த இளைஞர் சமூகம்.

இங்கு நாம் யார் மீது குற்றம் சொல்வது? மகன் வெளிநாடு போய் விட்டான். இனி எமக்கென்ன குறை என்ற நினைப்போடு பணத்தை எதிர் பார்த்து, எதிர்பார்த்து, எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காத போது ஏமாந்து நின்ற பெற்றவர்களினதும் உடன் பிறப்புகளினதும் நொந்த உள்ளங்களின் மீதா, அல்லது உயிர்ப் பாதுகாப்பையும் அத்தோடு வசதியான வாழ்வையும் தேடி வந்து வதிவிட அனுமதி கூடக் கிடைக்காத நிலையில் இளமைக்கால வசந்தங்களைத் தொலைத்து விட்டு வெறும் பணம் தேடும் இயந்திரகளாகி விட்ட எமது புலம்பெயர் இளைஞர்களையா? 

''பதிவுகளி'ல் அன்று - விம்பம்- 2010 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா: தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்! - ஜெயன் தேவா -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

 டிசம்பர் 2010  இதழ் 132  -
விம்பம்- 2010 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா: தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்!  - ஜெயன் தேவா -

விம்பம் அமைப்பின் ஆறாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா 21-11-2010 அன்று லண்டன் கிறீனிச் பல்கலைக்கழக (University of Greenwich) திரை அரங்கில் நடைபெற்றது. - விம்பம் அமைப்பின் ஆறாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா 21-11-2010 அன்று லண்டன் கிறீனிச் பல்கலைக்கழக (University of Greenwich) திரை அரங்கில் நடைபெற்றதுஆறு வருடங்களின் முன்பு நடைபெற்ற முதலாவது குறும்பட விழாவில் பங்குபற்றிய படங்களைப் பார்த்தபின்பு புலம்பெயர் சினிமா என்பது தமிழ் நாட்டு சினிமாவின் மலிவுப் பதிப்பு என்ற எண்ணம் தவறானது என்பதை நிரூபித்து விட்டதாக மனதில் தோன்றியது. அந்த எண்ணம் கூடவே ஒரு பெருமித உணர்வையும் அன்று மனதில் ஏற்படுத்தியது இன்றும் ஞாபகத்திற்கு வந்தது. ஒவ்வொரு தமிழ் இல்லத்தினதும் வரவேற்பறைக்குள் தினமும் நுழைந்து கொள்ளும் தமிழ் மசாலா சினிமாவும், செல்வி, சித்தி இத்தியாதி ஸீரியல்களும் தமிழ் ரசிகரின் மனதில் ஏற்படுத்தி விட்ட பாதிப்புக்களை தாண்டி நீங்கள் அறிந்து கொள்வதற்கு வேறொரு விஷயமும் இருக்கிறது என்பதாக தமிழ் குறும்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்திய தளமாக விம்பம் அமைந்தது என்றால் அது மிகையில்லை. சினிமா என்ற கலை வெளிப்பாட்டின் மீதான ஆர்வமும் வித்தியாசமான முறையில் செய்து முடிக்க விழையும் மனோபாவமும் சேர்ந்து புலம்பெயர் தமிழரிடையே பல முயற்சியாளர்களை உருவாக்கியிருந்ததை நான் விம்பம் விழா மூலமே அறிந்து கொண்டேன். செலவாகும் பணத்தை திரும்பப் பெறுவது அறவே சாத்தியமில்லை என்று தெரிந்த போதும் அவர்கள் தமது ஆக்க முயற்சியில் பின் நிற்கவில்லை என்பது போற்றப்படவேண்டிய ஒரு விஷயம்.

'பதிவுகளி'ல் அன்று: பாலஸ்தீனமும் இலங்கையும்: இரும்புச் சுவரின் பின்னால் சில பாடங்கள்! - ஜெயன் மகாதேவன் (ஆஸ்திரேலியா )-

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

ஜூன் 2008 இதழ் 102  

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற சிட்னி அரபுத் திரைப்படவிழா 2008 இல், பலஸ்தீனப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட இரும்புச் சுவர் (The Iron Wall) என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இஸ்ரேலிய அரசு தனது சியோனிசவாத (Zionism) இன அழிப்புக் கொள்கைகள் மூலம் பலஸ்தீன மக்களை எவ்வாறு தொடர்ந்து நிர்மூலமாக்கி அழித்து வருகிறது என்பதை படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. 52 நிமிடங்களில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துன்பங்களையும் கொடுமைகளையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறந்த முறையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் இது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திரையரங்கில் கேட்ட பல விசும்பல் ஒலிகள் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தின.

படத்தின் இயக்குனர் மொஹமட் அல்அதார் ஒரு பலஸ்தீனர். மனித உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் செயல்வீரர். 2002 இல் மானிட உயர்வுக்கான மார்ட்டின் லூதர் கிங் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய அரசினாலும், சியோனிஸ யூதர்களாலும் இழைக்கப்படும் கொடுமைகளை, பலஸ்தீனர் அல்லாதவர்களே படத்தில் விபரிக்கிறார்கள். இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகள் அநீதியானவை என்று கருதும் இஸ்ரேலிய யூத அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், இஸ்ரேலிய இராணுவத்திலிருந்து விலகிய போர்வீரர்கள் எனப் பலதரப்பினரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்களுடைய கருத்து சரியானது என நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்கள் படத்தில் காட்சிகளாக விரிகின்றன. இக்காட்சிகள் படத்திற்காக அமைக்கபட்டனவாக இல்லாமல், அவை உண்மையாக நடைபெறும் போது படம் பிடிக்கப்பட்டவையாக இருப்பதால், அக்காட்சிகளின் வீரியம் மனதில், மனச்சாட்சியில் ஓங்கி ஆணி அடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...