Saturday, October 25, 2025
காலத்தால் அழியாத கானம்: 'அம்மா என்றால் அன்பு'
கே.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளை, அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடுபவர் ஜெயலலிதா.
கண்களை மூடிக்கொண்டு கேட்டுப் பாருங்கள் கர்நாடக சங்கீதம் நன்கறிந்து பாடும் பாடகியொருவரின் குரலோ என்று பிரமித்துப் போவீர்கள்.
https://www.youtube.com/watch?v=0kZMaWiExME&list=RD0kZMaWiExME&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
காலத்தால் அழியாத கானம்: 'காசிக்குப் போகும் சந்நியாசி'
'சந்திரோதயம்' திரைப்படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில், #கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள் டி.எம்.எஸ் & சீர்காழி கோவிந்தராஜன். நடிப்பு: #எம்ஜிஆர் , நாகேஷ் & மனோரமா.
அப்பாவுக்குப் பிடித்த இப்பாடல் எனக்கும் பிடித்தது. பாடகர்களின் குரல்களையும், எம்ஜிஆர், நாகேஷின் நடிப்பையும் கேட்கும்போதெல்லாம் இரசிப்பேன். கூடவே அப்பா பற்றிய நினைவுப்பாம்பும் ஆழ்மனப்புற்றிலிருந்து எழுந்து தலை விரித்தாடும்.
இத்திரைப்படம் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம். இப்பாடலின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் , நாகேசுடன் சிறிது நேரம் உரையாடுவார். அப்போது சுடப்படுவதற்கு முன்பிருந்த எம்ஜிஆரின் இன் குரலையும் கேட்கலாம். கேட்கையில் சுட்டவர்மீது ஆத்திரம் வருவதைத் தடுக்க முடியாது.
https://www.youtube.com/watch?v=UwpvmT6_rvY&list=RDUwpvmT6_rvY&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
Wednesday, October 22, 2025
கரூர் துயரும் , எழுத்தாளர் ஜெயமோகனின் 'சாமான்ய மக்களின் கும்பல்' மனநிலை பற்றிய கருத்தும் பற்றி..
அண்மையில் கரூரில் நடந்த , தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கிடையில் நிலவும் கும்பல மனநிலை என்று ஒரு புதிய தத்துவத்தை, ஹிட்லரின் பாசிதத்தை உதாரணமாகக் காட்டி, எடுத்துரைக்கின்றார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்குரிய யு டியூப் காணொளி - https://www.youtube.com/watch?v=VjJ3mJiR4mg
ஜெயமோகன் சொற் சித்தர். சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். அவரது இவ்வுரையும் அத்தகையதுதான். தனக்கேரியுரிய சொற் சிலம்பமாடும் திறமையினை இங்கு அவர் பாவித்துச் சொற் சிலம்பம் ஆடுகின்றார். நடந்த மக்களின் அழிவுக்குக் காரணம் சாமான்ய மக்களின் கும்பல் மனநிலையே காரணமென்று கூறுவதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றார். அவர் இதனைத் திட்டமிட்டுச் செய்யவில்லை.அவர் தன் சுய தர்க்கச் சிந்தனையின் மூலம் அவ்விதமானதொரு முடிவுக்கு வந்து, அதனடிப்படையில் நடந்த அழிவுக்குக் காரண்மாகப் புதியதொரு தத்துவத்தை அல்லது கோட்பாட்டை முன் வைக்கின்றார். அவ்வளவுதான்.
Tuesday, October 21, 2025
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -
- இக்கதையில்
வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார்.
அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த
உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. -
'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?'
சின்னம்மா
வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச்
சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது.
பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம்
நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி.
'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?'
"இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்."
"என்ன
அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான்
நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ
எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?"
என்னைக் கவர்ந்த வானொலி ஊடகவியலாளர் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' - 'கவரிமா'
நான் தொடர்ச்சியாகச் CMR 101.3 FM தமிழ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்பவன் அல்லன். ஆனால் ,அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. குறிப்பாகச் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சி என்னைக் கவர்ந்த ஒன்று. வெள்ளி இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடக்கும் நிகழ்ச்சி. ஒரு சொல்லைப்பற்றிய பொதுவான விபரத்தைத் தந்து விட்டு , நேயர்களைக் இரண்டு கேள்வி கேட்க விடுவார்கள். நேயர்களின் கேள்விகள் மூலம் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் இறுதியாக வரும் நேயர்கள் பெரும்பாலும் விடையினை ஊகித்து விடுவார்கள்.
Sunday, October 19, 2025
நியூ யோர்க் மாநகரத்தில் 'குடிவரவாளன்'!
காலத்தால் அழியாத கானம்: "காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்"
டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை!
டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை! டொரோண்டோ ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
.png)




