Thursday, October 30, 2025

'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva): "சூட மானி கேபலால"


'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva) பாடிய் பாடல்கள் எப்பொழுதும் பசுமை நிறைந்த நினைவுகளாக எம் நினைவில் நிலைத்து நிற்பவை. குறிப்பாகச் "சூட மானி கேபலால" துள்ளிசைப் பாடலைக் குறிப்பிடலாம்.

'பைலா' போர்த்துக்கேயரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம். இன்றுவரை உயிர்த்துடிப்புடன் நிலைத்து நிற்கும் இசை வடிவம்.

இப்பாடலைக் கேட்கும் எவரையும் உற்சாகம் பற்றிக்கொள்ளும், துள்ளியெழுந்து ஆட வைக்கும். அப்படித்தான் எம் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் எம்மை ஆட வைத்தது.

அக்காலகட்டத்தில் பல்கலைககழகத்தில் நடந்த பல்வகைக் களியாட்ட இரவுகளிலும் , சுற்றுலாக்களிலும் தவறாது ஒலித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல்.

இவர் தென்னிலங்கையின் மாத்தறையில் 13 ஜூலை 1944 பிறந்தவர். பல்வேறு இசைக்குழுக்களில் பாடிப்புகழ்பெற்ற இவர் தனக்கென்றோர் இசைக்குழுவை வைத்திருந்தவர். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். ஆட்டிசம் ( Autism ) நரம்பு வளர்ச்சிக் குறையுள்ளவர்களுக்காகக் குரல் கொடுத்த பாடகர். அதற்காக ஓர் இசை நிகழ்ச்சியையும் கொழும்பில் நடத்தியவர். திரைப்படப்பின்னணிப் பாடகராக, பைலா இசைப் பாடகராக, சமூகச் செயற்பாட்டாளராக மக்கள் மனத்தில் தன் பாடல்கள் மூலம் நிலைத்து நிற்பவர் 'பைலா' மன்னன் டெஸ்மண்ட் டி சில்வா.

இறுதிக்காலத்தில் தன் மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் 9 ஜனவரி 2022 அன்று மாரடைப்பால் மறைந்தார்.

"சூட மானி கேபலால" பாடலைக் கேட்டுத்துள்ளி ஆடிட - 

 https://www.youtube.com/watch?v=HCG0EBbdgI4

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப [Google Nano Banana] உதவி:VNG]

இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் 'யாழ்தேவி'ப் பாடல்!


இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலை யாழ்தேவி பற்றியொரு பாடல் பாடியிருக்கின்றார். அது: "இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது"
 
பாடலை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், யாழ்தேவியில் பயணித்த உணர்வைப் பெறுவீர்கள். இசை, பாடல் வரிகள், காணொளியில் காட்டப்படும் காட்சிகள் , பாடகரின் குரல் இவையே அவ்வுணர்வுக்கான காரணங்கள்.
 
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
 

பாடகர் ஏ.ஈ.மனோகரனின் 'யாழ்தேவி'ப் பாடல்!


இலங்கைப் பாடகர் ஏ.ஈ.மனோகரனும் 'யாழ்தேவி' பற்றியொரு பாடல் பாடியுள்ளார். அது "உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி"
 
இப்பாடல் பாடகர் ஏ.ஈ.மனோஹரனை, எம் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த யாழ்தேவியையும் நினைவூட்டுகின்றது. 
 
வாருங்கள். சிறிது நேரம் யாழ்தேவியில் பயணித்து வருவோம்.
 
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
 

Tuesday, October 28, 2025

கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!


இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை இப்பெண் பேசுவது போல் காணொளியாகவும் ஆக்க முடியும். நான் தற்போது பாவிப்பது இலவச சேவையென்பதால் அதற்கான வசதிகள் இல்லை.

குரல் உருவாக்கப்பட்ட பாவிக்கப்பட்ட பதிவு:
 
என் பால்யப் பருவத்து அனுபவங்களைப் பற்றி நிறையவே பதிவுகள் எழுதியிருக்கின்றேன். அவற்றில் வவுனியா பட்டாணிச்சுப் புளியங்குளத்தின் , வான் பாயும் அணைப் பகுதியை என்னால் மறக்கவே முடியாது.குருமண்காடு என்னும் பகுதியை அண்மித்திருக்கும் குளம் பட்டாணிச்சுப் புளியங்குளம். மன்னார் வீதியிலுள்ளது.
மாரிகளில் குளம் நிறைந்து வான் பாயும். இரவு முழுவதும் பெய்யும் மழையின் ஒலியினை இரசித்தபடியே தூங்கிக் கிடக்கும் நாம் விடிந்ததும் வான் பாயும் குளக்கட்டை நோக்கி ஓடுவோம்.
 
அக்கிராமத்து மக்கள் பலரையும் அங்கு அச்சந்தர்ப்பத்தில் காணலாம்.
வான் பாயும் நீருடன் வழுகிச் செல்லும் விரால் மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். வெங்கணாந்திப் பாம்புகளும் அவ்விதம் விரால் பிடிப்பதுண்டு. அவ்விதமான ஒரு பாம்பையும் ஒரு தடவை பார்த்திருக்கின்றேன். இரவு முழுவதும் விரால் பிடித்து உண்ட மயக்கத்தில் அசைவற்றுக் கிடந்தது. 'தொண்டனுக்கு உண்ட களை' என்றொரு சொலவடை உண்டல்லவா. அதுதான் அப்போது நினைவுக்கு வந்தது.
 
என் பால்ய பருவத்து அழியாத கோலங்களில் இந்தப் பட்டாணிச்சுப்புளியங்குளத்தின் 'மாரி வான்பாய்தலு'க்கும் அழியாத ஓரிடமுண்டு.
 
இந்தக் குளத்தின் வான் பாயும் நீரொலியைக் கேட்கும்பொழுதெல்லாம் நினைவில் வரும் வரிகள் இவை:
 
"உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!'
 
அப்பொழுதே அப்பா வாங்கி தந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்று 'புலியூர்க் கேசிக'னின் உரையுடன் வெளிவந்திருந்த சிலப்பதிகாரம் (மூலமும், உரையும் தொகுதி). அதன் பக்கங்களைப் புரட்டுகையில் அப்பொழுதே என் மனத்தில் பதிந்து விட்ட கானல் வரி வரிகள் இவை. முழு நூலையும் படிக்கும் ஆற்றல் இல்லாதிருந்த சமயத்திலும் கவிஞர் இளங்கோவின் எளிமையான இது போன்ற வரிகள் சில கண்ணில் பட்டன. அவை மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டன. மதகு ஓதை, உடைநீர் ஓதை என்னும் சொற்கள் என் மனத்துக்குப் பிரியமான சொற்கள். அச்சொற்களை நினைத்த மாத்திரத்தில் பெருமழை பெய்து , கட்டுடைத்துப் பாயும் வெள்ளமும், அதன் ஒலியும் நினைவுக்கு வந்து விடும்.

Monday, October 27, 2025

நினைவில் நிற்கும் வான் பாயும் பட்டாணிச்சுப் புளியங்குளம்!


என் பால்யப் பருவத்து அனுபவங்களைப் பற்றி நிறையவே பதிவுகள் எழுதியிருக்கின்றேன். அவற்றில் வவுனியா பட்டாணிச்சுப் புளியங்குளத்தின் , வான் பாயும் அணைப் பகுதியை என்னால் மறக்கவே முடியாது.
 
குருமண்காடு என்னும் பகுதியை அண்மித்திருக்கும் குளம் பட்டாணிச்சுப் புளியங்குளம். மன்னார் வீதியிலுள்ளது.
 
மாரிகளில் குளம் நிறைந்து வான் பாயும். இரவு முழுவதும் பெய்யும் மழையின் ஒலியினை இரசித்தபடியே தூங்கிக் கிடக்கும் நாம் விடிந்ததும் வான் பாயும் குளக்கட்டை நோக்கி ஓடுவோம்.
 
அக்கிராமத்து மக்கள் பலரையும் அங்கு அச்சந்தர்ப்பத்தில் காணலாம். வான் பாயும் நீருடன் வழுகிச் செல்லும் விரால் மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். வெங்கணாந்திப் பாம்புகளும் அவ்விதம் விரால் பிடிப்பதுண்டு. அவ்விதமான ஒரு பாம்பையும் ஒரு தடவை பார்த்திருக்கின்றேன். இரவு முழுவதும் விரால் பிடித்து உண்ட மயக்கத்தில் அசைவற்றுக் கிடந்தது. 'தொண்டனுக்கு உண்ட களை' என்றொரு சொலவடை உண்டல்லவா. அதுதான் அப்போது நினைவுக்கு வந்தது.
 
என் பால்ய பருவத்து அழியாத கோலங்களில் இந்தப் பட்டாணிச்சுப்புளியங்குளத்தின் 'மாரி வான்பாய்தலு'க்கும் அழியாத ஓரிடமுண்டு.
 
இந்தக் குளத்தின் வான் பாயும் நீரொலியைக் கேட்கும்பொழுதெல்லாம் நினைவில் 
வரும் வரிகள் இவை:
 
"உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!'
 
அப்பொழுதே அப்பா வாங்கி தந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்று 'புலியூர்க் கேசிக'னின் உரையுடன் வெளிவந்திருந்த சிலப்பதிகாரம் (மூலமும், உரையும் தொகுதி). அதன் பக்கங்களைப் புரட்டுகையில் அப்பொழுதே என் மனத்தில் பதிந்து விட்ட கானல் வரி வரிகள் இவை. முழு நூலையும் படிக்கும் ஆற்றல் இல்லாதிருந்த சமயத்திலும் கவிஞர் இளங்கோவின் எளிமையான இது போன்ற வரிகள் சில கண்ணில் பட்டன. அவை மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டன. 
 
மதகு ஓதை, உடைநீர் ஓதை என்னும் சொற்கள் என் மனத்துக்குப் பிரியமான சொற்கள். அச்சொற்களை நினைத்த மாத்திரத்தில் பெருமழை பெய்து , கட்டுடைத்துப் பாயும் வெள்ளமும், அதன் ஒலியும் நினைவுக்கு வந்து விடும்.
 
இங்குள்ள புகைப்படம் 'கூகுள் நனோ பனானா'த் (Google Nano Banana) தொழில் நுட்பம் மூலம் 'டிஜிட்டல்' ஓவியமாக்கப்பட்ட புகைப்படம்.

Sunday, October 26, 2025

கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


கவிஞர் பாத்திமா நளீராவின்  'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே.  இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை. 

இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.

எண்ணங்களே வாழ்வு என்பதை எடுத்துக்காட்டும் காணொளி!


*
Digiat Art (Google Nano Banana) help: VNG

வாழ்க்கைக்கு ஆரோக்கியமான விளைவுகளைத் தருபவை நேர்மறையான , நம்பிக்கை மிக்க எண்ணங்களே. எண்ணும் எண்ணங்களுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது என்பது உளவியல் நிபுணர்கள் பலரின் கண்டு பிடிப்பு.

வாழ்வில் இன்பமென்பதை உணர்வது மனத்தின் உணர்வுகள் மூலமே. மனிதரின் செயற்பாடுகள் அனைத்தையும் இறுதியில் இன்பத்தை அடைதலையே நோக்கமாகக் கொண்டு அமைகின்றன.

இன்பம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியிருப்பதில்லை. ஒருவருக்குப் பயணத்தில் இன்பம். ஒருவருக்குக் கலைகளில் இன்பம். ஒருவருக்குச் செல்வத்தைப் பெருக்குவதில் இன்பம். ஒருவருக்குச் சேவை செய்வதில் இன்பம். ஒருவருக்கு எழுதுவதில், வாசிப்பதில் இன்பம். இவ்விதம் மனிதரின் செயல்கள் அனைத்துமே அவரவர் அடையும் இன்பத்தை நோக்கியே அமைந்திருக்கின்றன.

இக்காணொளி நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய வேண்டிய இன்பத்தை, இலக்குகளை எப்படி அடையலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் காணொளி. நீங்கள் எண்ணும் எண்ணங்களே உங்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைய உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் காணொளி.

இவ்விதமான நூல்கள் பல உலகின் பல்வேறு மொழிகளிலும், தமிழ் உட்பட, வெளியாகியுள்ளன. காணொளிகளும் அவ்விதம் வெளியாகியுள்ளன. அவற்றில் நல்ல காணொளிகளில் ஒன்று இந்தக் காணொளி.

இறுதிவரை இக்காணொளியைத் திறந்த மனத்துடன் பாருங்கள். நம்பிக்கையுடன் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=Vt_H4-GZxJA 


வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...