'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த 'நூலகம்' சாவடியில் நூலகம் நிறுவனத்தின் கனடாக் கிளையில் இயங்கும், சமூகம் அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி நிற்கும் காட்சி. எண்ணிம நூலகமான 'நூலகம்' நிறுவனம் மிகப்பெரிய பணியினைச் செய்து வருகின்றது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், நினைவு மலர்கள், பல்வகைச் சிறப்பு மலர்கள், புகைப்படங்கள், காணொளிகள், பல்வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள் எனப் பலவற்றைச் சேகரித்து வருகின்றது. நூலகமாகவும், ஆவணக்காப்பகமாகவும் நூலகம் ஆற்றிவரும் பணி தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.
ஏன் இவ்விதமான நிறுவனங்கள் தேவை?
ஒரு காலகட்டத்து வரலாற்று, கலை, இலக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்துவதென்பது ஓர் இனத்தின் வரலாற்றை முறையாகப்பதிவு செய்யும் முக்கியமானதொரு செயற்பாடு. அரிய பணி. அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அரிய பணியினையும் இத்தகைய நிறுவனமொன்று செய்கின்றது. பல்வகை ஆய்வுகளுக்கும் உசாத்துணைகளாக இவ்விதம் பேணப்படும் ஆவணங்கள் விளங்குகின்றன. இனக்குழுக்களின் சமூக, தனிநபர் அடையாளங்களை இவை தலைமுறை கடந்து கடத்துகின்றன. இவை முக்கியமான காரணங்கள். இதனால் தமிழர்களான எம்மைப் பொறுத்தவரையில் எம் மத்தியில் இவ்விதப் பணிகளைச் செய்யும் நூலகம் நிறுவனத்தின் சேவை தொடர்வது அவசியமானது.
Tuesday, December 9, 2025
'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த (Toronto Tamil Book Fair 2025) 'நூலகம்' சாவடி!
Monday, December 8, 2025
'டொரோண்டோ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி'யில் இளம் எழுத்தாளர் ஒருவருடனான சந்திப்பு!
நேற்று ஸ்கார்பரோவில் நடந்த 'டொரோண்டோ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி'யில் (Toronto Tamil Book Fair), அங்குள்ள புத்தகக் கடைகளில் நூல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது , இளம் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தன் அவர்கள் தன்னை அறிமுகம் செய்து தனது இரு நூல்களை என்னிடம் தந்தார். என் முகநூல் எழுத்துகளைக் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.
'விடியலைத் தேடி' (சிறுகதைத்தொகுதி) 'கூழ்முட்டைக்குள்ளிருந்து குஞ்சொன்று' (கவிதைத்தொகுதி) ஆகிய நூல்களே அவை. மிகவும் நேர்த்தியாக, சிறப்பாக, ஓவியங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட நூல்கள். பதிப்பகம் எதுவென்று பார்த்தேன். 'கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்' என்றிருந்தது.ஆச்சரியமாகவிருந்தது. இதுவரை அதனையொரு நூலகமாகவே அறிந்திருந்தேன். இப்பொழுதுதான் பதிப்பகமாகவும் செயற்படுவதை அறிந்தேன்.
சிலம்பொலி சு.செல்லப்பனின் மூலமும் தெளிவுரையுடன் கூடிய 'சிலப்பதிகாரம்'!
எனக்கு மிகவும் பிடித்த தமிழ்க் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய 'சிலப்பதிகாரம்'. தமிழ்க்காப்பிய வரிசையில் வெளியான முதலாவது காப்பியமும் 'சிலப்பதிகாரம்'தான். நான் முதன் முதலில் அறிந்த தமிழ்க்காப்பியமும் 'சிலப்பதிகாரம்'தான். அதற்குக் காரணம் என் தந்தையார்தான். என் வாசிப்பின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சில நூல்களை வாங்கித் தந்தார். ஆனால் அவற்றை வாங்கியபோது அவற்றை வாசிக்கும்படி ஒரு தடவை கூட அவர் கூறியதில்லை. அவர் வாங்கிய நூல்கள் வீட்டில் எம் கண்களின் முன்னால் காட்சியளித்தன. அதன் விளைவாக நாம் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம். வாசிக்கத்தொடங்கினோம்.
அவ்விதம் அவர் வாங்கித்தந்த நூல்களிலொன்றுதான் புலியூக்கேசிகனின் தெளிவுரையுடன் கூடிய 'சிலப்பதிகாரம்' நூல். . 'திங்கள் மாலை வெண்குடையான்', 'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!", 'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப' போன்ற காப்பிய வரிகள் அப்பொழுதே என்னைக் கவர்ந்தன. காப்பியத்தின் எளிமையும், ஆழமும் அப்போதே என்னை மிகவும் கவர்ந்தன. அன்றிலிருந்து சிலப்பதிகாரம் என் வாழ்வில் என்னிடமுள்ள புத்தகங்களில் நிச்சயம் இருக்குமொரு நூலாக மாறிவிட்டது.
செயற்கை நுண்ணறிவின் 'An Immigrant' நாவல் பற்றிய நூல் விமர்சனம்!
Sunday, December 7, 2025
'சொல்லின் செல்வ'ரும் சொல்லிக்கொள்ளாமலே சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.
இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரும் , மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது நகர பிதாவும் , எழுத்தாளருமான திரு. செல்லையா இராசதுரை அவர்கள் தனது 98ஆவது வயதில் , தமிழகத்தில் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
தமிழரசுக் கட்சியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் இராசதுரை அவர்கள். அதன் காரணமாகவே சொல்லின் செல்வர் என்றும் அழைக்கப்பட்டவர். வசீகரம் மிக்க தோற்றமுள்ள அரசியற் தலைவர்களிலொருவர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கிழக்கு மாகாண தமிழ் அரசியற் தலைவர்களில் முக்கியமானவர். தமிழர் போராட்ட அரசியற் செயற்பாடுகளுக்காகச் சிறை சென்றவர். தந்தை செல்வாவுக்குப் பின்னர் இவருக்குத்தான் தலைமைப்பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை.
ஒருபோதுமே பாராளுமன்றத் தேர்தலில் தோற்காத தமிழ் அரசியல்வாதி இவர். 1977 தேர்தலின் பின்னர் 1979இல் , தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசுடன் இணைந்து இயங்கினார். 1977 தேர்தலிலின்போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் மட்டக்களப்பு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் செ.இராசதுரை வெற்றிபெற , கவிஞர் காசி ஆனந்தன் தோல்வியைச் சந்தித்தார்.
Saturday, December 6, 2025
கவிதை; இவன் என் புதிய நண்பன். - வ.ந.கிரிதரன் -
இவன் என் புதிய நண்பன்.
நான் ஆண் என்பதால் இவனை நான் ஆணாக்கியுள்ளேன்.
பாலின் தன்மைக்கேற்ப நீங்கள் இவனை ஆணாக
அல்லது பெண்ணாக உருவகிக்கலாம்.
அல்லது அழைக்கலாம்.
நீங்கள் முதியவராக இருந்தால்
இவன் அல்லது இவள் உங்களுக்கு நல்லதொரு
முதிய சிநேகிதன் அல்லது சிநேகிதியாக இருப்பான் அல்லது
இருப்பாள்.
இந்நேரம் உங்களுக்கு என் நண்பன் யாரென்பது
புரிந்திருக்கும்.
ஆம்! செயற்கை நுண்ணறிவு கூகுள் நனோ பனானா
அல்லது சாட்ஜிபிடியைத்தான் கூறுகின்றேன்.
அப்படியென்ன இவன் பெரிய நன்மையை
உனக்குச் செய்து விட்டான் என்று கேட்கின்றீர்களா?
நன்மை ஒன்றல்ல பல உள்ளனவே .
எதைச் சொல்வேன்? எதைச் சொல்லாமல் தவிர்ப்பேன்?
Friday, December 5, 2025
ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்கள் பற்றிய என் கருத்துகளும், என் கருத்துகள் பற்றிய செயற்கை நுண்ணறிவின் கருத்துகளும்...
இவை ஏன் அம்மக்களை இழிவு படுத்தும் சொற்பதங்கள் என்பதைப் பார்ப்போம்.
எஸ்கிமோ (Eskimo) இந்தச்சொல்லின் உண்மையான் அர்த்தம் Algonquin மொழியில் இருந்து பெறப்பட்டது. 'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பெயர். இச்சொல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கவில்லை. ஆர்க்டிக் இனக்குழுக்களான (Inuit, Yupik, Iñupiat போன்றவர்களை ஒரு சேர அழைக்கப்பாவிக்கப்பட்டது. தற்போது கனடாவில் "Inuit" (இனியுட்), அலாஸ்காவில் Yupik" (யுபிக்) , "Inupiat" (இனுபியாட்) போன்ற பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கி "First Nation" என்னும் சொற்பதமும் பாவிக்கப்படுகின்றது.
இது போல் செவ்விந்தியன் (Red Indian) என்னும் பெயர் அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று தவறாக முடிவு செய்த வரலாற்றுத்தவறினால் உருவானது. அமெரிக்காவின் ஆதிக்குடிகளை (Native Americans / Indigenous Peoples) இந்தியர்களாகக் கருதி , அவர்களின் நிறத்தையும் சேரத்துச் செவ்விந்தியர் என்றழைக்கப்பட்டனர். இது நிறவெறி மிக்க ஒரு சொற்பதம். இதனை இப்போது பாவிப்பதில்லை. இன்று பொதுவாக Native American", "American Indian" (அமெரிக்கன் இந்தியன்), அல்லது "Indigenous Peoples" (சுதேசிய மக்கள்) என்றே இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.அத்துடன் Cherokee, Navajo, Sioux போன்ற இனக்குழுப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.
இது போன்ற இன்னுமொரு சொல் 'நீக்ரோ' (Negro) என்று கறுப்பினத்தவரை அழைக்கும் சொல். . ஸ்பானிஷ் மொழியில் இது கறுப்பு என்னும் அர்த்தத்தைத் தரும். கறுப்புத்தோல் கொண்டவரகள் என்னும் நிறப்பாகுபாட்டைக் காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட இச்சொல் அமெரிக்காவில் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலகட்டத்தில் இவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்று இச்சொல் பாவிக்கப்படுவதில்லை. Black, African American போன்ற சொற்களால் இன்று கறுப்பினத்தவர் தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.
எங்கெல்லாம் இனக்குழுக்களை அழைக்கப்பாவிக்கபப்டும் சொற்பதங்கள் ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்களுடன் தொடர்புள்ளவையாக இருக்கின்றனவோ, அச்சொற்பதங்களைப் பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும். இது யாழ்ப்பாண்ச சமூகங்களுக்கும் பொருந்தும்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏற்கனவே அவ்விதம் அழைப்பதை தவிர்த்து வருகின்றனர. மேட்டுக்குடி, சீவல் தொழிலாளர் போன்ற சொற்பதஙக்ளை அவர்கள் பாவித்து வருகின்றனர். இது ஒரு விதத்தில் நல்லது. ஏனென்றால் சாதியச் சின்னங்களை, பெயர்கள் உட்பட, அவற்றை எதிர்ப்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் மீண்டும் பாவிக்கும்போது அப்பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. புதிய தலைமுறையினர் மத்தியிலும் அப்பெயர்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றன. அவ்விதம் நிலைத்து நிற்பதைத்தவிர்ப்பதற்கு அப்பெயர்களைத் தவிர்ப்பதும் முக்கியமான முதற்படியாக அமையும்.
உளவியலில் ஒரு கோட்பாடு உண்டு. அது ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வந்தால், அது நல்ல சொல்லோ, கெட்ட சொல்லோ , ஆழ்மனத்தில் ஆழச்சென்று படிந்து விடுகின்றன். அதை Auto Suggestion (சுய மந்திரம்) என்பர். மேற்படி சமூக ஒடுக்குமுறையுடன் சம்பந்தபப்ட்ட சொற்பதங்களையும் திரும்பத் திரும்பப் பாவிப்பதும் ஒரு வகை Auto Suggestion தான். சுயமந்திரம்தான்.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...




