Saturday, December 20, 2025

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -



இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி  சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள்  பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம்.  செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இதனை ஆணாதிக்க மனப்பான்மை என்று கருத வேண்டாம். 



நான்: 
உன்னுடன் இலங்கைப் பிரச்னை பற்றிச் சிறிது உரையாடலாமா?

எந்திரன்: 
இலங்கை பிரச்சனை பற்றி பேசலாம். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? அல்லது குறிப்பிட்ட எந்த தகவலைப் பற்றி பேச வேண்டும்?

நான்: 
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு தமிழர்க்ள் சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அது பின் தனிநாட்டுக்கோரிக்கையானது. யுத்தம் மூண்டது. யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்தது. இன்று போரில் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய தென்னிலங்கைத் தலைவர்களையெல்லாம் மக்கள் துரத்தி விட்டார்கள். இன்று அங்கு புதியதொரு தலைமை, உழைக்கும் மக்கள் மத்தியினைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவர் தலைவராகவிருக்கும் சூழல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல புதிய சூழல் ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எல்லாம் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்துள்ளது. இந்நிலையில் சமூக, ஊடகங்கள், புரிந்துணர்வு எல்லாம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,. இந்நிலையில் தென்னிலங்கை, வடகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியிலிருக்கும் அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி செய்வதாக நீ உணர்கின்றாயா?

எந்திரன்: 

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் வரலாறு, குறிப்பாக தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கை, தனிநாட்டுப் போராட்டங்கள், போர், அதன் முடிவு, அண்மைய அரசியல் மாற்றங்கள், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஆகியவை குறித்த உங்கள் பார்வை மிகவும் விரிவானது.

Friday, December 19, 2025

முகநூலிலும் சம்பாதிக்கலாம்!


நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது. 

முகநூல் உண்மையில் பொருளாதாரரீதியிலும் உதவக்கூடியது என்பதை எடுத்துக்காட்டும் காணொளி இது.  பலருக்கு முகநூலின் ஆரோக்கியமான பயன்கள் தெரிவதில்லை.  முகமூடிகளில் வந்து ஒருவரையொருவர் தாக்குவதிலும் , ஒருவரின் புகழ்பெற்ற பதிவைக் களவாடித் தம் பெயரில் போடுவதிலும், ஒருவரைப்பற்றி அவதூறுகள் செய்வதிலும் இருக்கும் ஆர்வம் அதிகம். உண்மையில் முகநூலை ஆரோக்கியமாகப் பாவித்தால் , இதன் மூலம் நட்பைச் சம்பாதிக்கலாம், பணத்தையும் சம்பாதிக்கலாம். உங்கள் படைப்புகளையும் பலரிடத்தில் எடுத்துச் செல்லலாம். பொருட்களை விற்கலாம்.  வாங்கலாம். இப்படிக்கூறிக்கொண்டே போகலாம்.

Wednesday, December 17, 2025

சமகால இலங்கையின் கட்டட, நகர வடிவமைப்புக் கலையின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) - வ.ந.கிரிதரன் -


நகர வடிவமைப்பில் முக்கியமானதோர் அம்சம் போக்குவரத்தால் திணறிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகும். அந்த வகையில்   Kottawa நகரில் அமைந்துள்ள  மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Centre (MMC) முக்கியமானதொரு சாதனை. இவ்வகையில் மேனாடுகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் செயற்பாடுகளையெல்லாம் உள்வாங்கி (உதாரணத்துக்கு Park and Ride) , இலங்கையின் காலநிலைக்கேற்ப, மக்களின் பாவனையை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறந்ததொரு கட்டடமாக இதனைக் கருதலாம். இதனை வடிவமைத்த  கட்டடக்கலை நிறுவனம் கட்டடக்கலைஞர் முடித ஜெயக்கொடியின் 'Muditha Jayakody Associates (MJA)' நிறுவனமாகும். 

Tuesday, December 16, 2025

இலங்கையின் முன்னோடிப் பெண் நிலவடிவமைப்புக் கலைஞர் (Landscaoe Architect) ஹெஸ்டர் பஸ்நாயக்கவும் அவரது நிலவடிவமைப்புகலை (Landscaoe Architecture) பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -


கட்டக்கலை பற்றி அறிந்த அளவு பொதுவாக நிலவடிமைப்புக் கலை (Landscaoe Architecture)  பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை. உண்மையில் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலையுடன் பின்னிப் பிணைந்த இன்னுமொரு கலைதான் நிலவடிவமைப்புக் கலை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சரித்திரச் சின்னங்கள் நிலவடிவமைப்புக் கலை எவ்வளவுதூரம் நகர அமைப்பில் முக்கிய இடத்தை வகித்தது என்பதை  உணர்த்தும் சான்றுகள். உதாரணத்துக்குச் சிகிரியா நகர அமைப்பில் நிலவடிவமைப்புக் கலையின் பங்களிப்பு வெளிப்படை. இது போல் பழமை வாய்ந்த விகாரைகள், அரச முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள், ஆலயங்கள் இவற்றிலெல்லாம் நிலவடிவமைப்புக் கலையின் தாக்கத்தைக் காணலாம். இன்று இத்துறை ஒரு பட்டப்படிப்பாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கபப்ட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் நிலவடிவமைப்புக் கலையில் முன்னோடிகளில்  ஒருவரான திருமதி ஹெஸ்ட்ர பஸ்நாயக்க பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வதே  இப்பதிவின் நோக்கம். 

எழுத்தாளர் தேவனின் (யாழ்ப்பாணம்) நாடகத்துறைப் பங்களிப்பு!


தேவன் (யாழ்ப்பாணம்) - சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் சிறந்த நாடகாசிரியர் என்பது எம்மில் எத்தனை பேருக்குத்  தெரியும்?

அதைத்தெரிவிக்கும், ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை  ஈழநாடு வாரமலரில் , கணேஷ் எழுதிய 'தேவன் ஒரு தனி இயக்கம்' என்னும் இக்கட்டுரை. இதில் அவர் தேவனுடன் நடத்தும் உரையாடலில்  , தேவனே தன் நாடக அனுபவங்களை விபரிக்கின்றார். அவற்றிலிருந்து பெற்ற தேவனுடைய நாடகத்துறை அனுபவங்கள் பற்றிய முக்கிய தகவல்கள்  இவை:

Monday, December 15, 2025

காலத்தால் அழியாத கானங்கள்: மெல்லப் போ! மெல்லப் போ!


[டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி]

https://www.youtube.com/watch?v=9AT_Vh5-Oos

எம்ஜிஆர் சுடப்பட்ட பின் நடித்து வெளியாகிப் பெருவெற்றியடைந்த திரைப்படம்  'காவல்காரன்' . யாழ் ராஜா திரையரங்கில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. கொழும்பிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. 

கறுத்த டீ சேர்ட்டுடன் , கட்டுமஸ்தான  உடலுடன் நடித்திருப்பார் எம்ஜிஆர். சுடுபட்ட பின்னர் அவ்விதமானதொரு ஆரோக்கியமான தோற்றத்துடன், ஆடிப்பாடி, ஓடி நடித்திருப்பார் எம்ஜிஆர் இப்பாடலில். 

எம்ஜிஆர், கவிஞர் வாலி, எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் & பி.சுசீலா கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத கானங்களிலொன்று இந்தப்பாடல். 

Sunday, December 14, 2025

வீரகேசரி மற்றும் தமிழ் ஊடகங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!


வீரகேசரி நிறுவனத்தாருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வீரகேசரி இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு, தமிழ் அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள். இன்று இணையத்தொழில் நுட்பமுள்ள காலகட்டம். வீரகேசரியின் பழைய பிரதிகளை வெளிவந்த ஆண்டிலிருந்து இன்று வரை பார்க்கும் வசதிக்கொண்ட வசதியினை ஏற்படுத்தினால், அது வாசகர்களுக்கும், கலை,இலக்கிய ஆளுமைகளுக்கும், திறனாய்வாளர்கள், ஆய்வாளர்களுக்கும், அவற்றில் எழுதிய எழுத்தாளர்கள் , ஊடகவியலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக அமையும். அதற்காக நியாயமான கட்டணத்தையும் அறவிடலாம். இதனைச் செய்வதால் இலாபமே. ஏன் இதுவரை இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.


இக்கோரிககை வீரகேசரி நிறுவனத்துக்கு மட்டுமல்ல. இலங்கையிலிருந்து வெளியாகும் அனைத்துத் தமிழ் ஊடகங்களுக்கும்தாம்.

['டிஜிட்டல் ஓவியம்' (கூகுள் நனோ பனானா) உதவி: வநகி}

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...