'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, December 19, 2025
முகநூலிலும் சம்பாதிக்கலாம்!
நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது.
முகநூல் உண்மையில் பொருளாதாரரீதியிலும் உதவக்கூடியது என்பதை எடுத்துக்காட்டும் காணொளி இது. பலருக்கு முகநூலின் ஆரோக்கியமான பயன்கள் தெரிவதில்லை. முகமூடிகளில் வந்து ஒருவரையொருவர் தாக்குவதிலும் , ஒருவரின் புகழ்பெற்ற பதிவைக் களவாடித் தம் பெயரில் போடுவதிலும், ஒருவரைப்பற்றி அவதூறுகள் செய்வதிலும் இருக்கும் ஆர்வம் அதிகம். உண்மையில் முகநூலை ஆரோக்கியமாகப் பாவித்தால் , இதன் மூலம் நட்பைச் சம்பாதிக்கலாம், பணத்தையும் சம்பாதிக்கலாம். உங்கள் படைப்புகளையும் பலரிடத்தில் எடுத்துச் செல்லலாம். பொருட்களை விற்கலாம். வாங்கலாம். இப்படிக்கூறிக்கொண்டே போகலாம்.உண்மையில் முகநூலில் அதன் உறுப்பினர்கள் அவர்கள் பதிவிடும் ரீல்கள், பதிவுகள், படங்கள் மூலம் உழைப்பதற்கு வழிகள் உள்ளன. அதற்கு உதவுவதுதான் முகநூலின் MONETIZATION புறோகிறாம். நீங்கள் முகநூலில் தொடர்ச்சியாக, பயனுள்ள பதிவுகளை இட்டு வந்திருந்தால் முகநூலே உங்களை இந்தப் புறோகிறாமில் சேர்த்துக்கொள்ளும். அதற்காக அழைப்பு விடுக்கும். அதற்கு உங்கள் புறொஃபைலில் நீங்கள் PROFESSIONAL MODE ஐ ON செய்திருக்க வேண்டும்.
இந்தக் காணொளியில் இவர் முதலில் முகநூல் மூலம் உழைத்தது $137 அமெரிகக் டொலர்கள். சென்ற வருடம் உழைத்தது $200,000 அமெரிக்க டொலர்கள். இவர் முகநூலில் தான் எப்படி உழைத்தார் என்பதைப் படிப்படியாகக் கூறுகின்றார். இதன் மூலம் எதைச் செய்தால், எதைச் செய்யாது விட்டால் முகநூலில் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். அவ்வகையில் பயனுள்ள காணொளி.
ஏற்கனவே முகநூலின் MONETIZATION புறோகிறாமில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் உதவக்கூடிய காணொளி இக்காணொளி - https://www.youtube.com/watch?v=pFtz-Wc8ZfU
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்! இசை & பாடல் - SUNO AI ஓவியம் - Google AI அதிகாலைகளில் , அந்திவேளைகளில் அன்று கல்லுண்டாய...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

No comments:
Post a Comment