நான் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தபோது விளையாட்டு வீரன் ஒருவனின் பெயர் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவிருந்தது.
யாழ் மாவட்ட விளையாட்டுச் சங்கத்தினால் , யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல் ஆகியவற்றில் , 16 வயதுக்குட்பட்ட பிரிவில் சாதனைகளுடன் கூடிய முதலிடங்களைப் பெற்று அவ்வருடச் சாம்பியன் பட்டம் பெற்ற விளையாட்டு வீரன் இவன். பெயர் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா என்னும் மாணவனே அவன்.
அதன் பிறகு என் கவனம் உதைபந்தாட்டம் , துடுப்பெடுத்தாட்டம் போன்றவற்றில் திரும்பி விட்டது. இம்மாணவனின் பெயரையும் அதன் பிறகு கேட்டதாக நினைவிலில்லை. ஆனால் பசுமையாக சாம்பியன் பட்டம் பெற்ற இவனது பெயரும், போட்டிகளும் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளன.
அண்மையில் பழைய ஈழநாடு பத்திரிகைப் பிரதிகளை நூலகம் தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு தடவை அப்போட்டிகள் பற்றி வெளியான செய்திக்குறிப்பு (!2.8.1972 வெளியான) கண்ணில் தட்டுப்பட்டது. மீண்டும் இவன் பற்றிய நினைவுகள் எழுந்தன.
யாருக்காவது இம் மாணவன் பற்றிய மேலதிகத் தகவல்கள், புகைப்படங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

No comments:
Post a Comment