Thursday, December 25, 2025

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!



இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.

மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

காதலுக்கு அர்த்தம் தந்தாய் கண்ணம்மா.
களிப்பால் உள்ளம் துள்ள வைத்தாய் கண்ணம்மா.
நினைவில் நிலைத்து நிற்பாய் கண்ணம்மா.
நெஞ்சில் நிறைந்து நிற்பாய் கண்ணம்மா.

பாட்டுக்கொரு பாவலனுக்கு ஒரு கண்ணம்மா.
பாவலன் இவனுக்கும் ஒரு கண்ணம்மா.
கண்ணம்மா உன்னை நினைக்கையிலே
எண்ணமெல்லாம் களிப்பால் நிறையுதடி.

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

நீயற்ற மண்ணில் இன்பம் இல்லை.
நின் குரலற்ற காற்றில் தண்மையில்லை.
காதல் நோயால் வாடுமிவன் வருத்தம்
கண்ணம்மா இல்லாமல் எப்படித் தீரும்.

கண்ணம்மா என் நெஞ்சில் நிறைந்தாயடி.
எண்ணமெல்லாம் எப்பொழுதும் நீ ஆனாய்.
கண்ணம்மாவின் உருவம் களி தரும்.
கண்ணம்மாவின் நினைப்பும் இன்பம் தரும்.

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.


No comments:

யு டியூப் ஆய்வாளர்கள்!

இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்க...

பிரபலமான பதிவுகள்