'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Tuesday, December 16, 2025
இலங்கையின் முன்னோடிப் பெண் நிலவடிவமைப்புக் கலைஞர் (Landscaoe Architect) ஹெஸ்டர் பஸ்நாயக்கவும் அவரது நிலவடிவமைப்புகலை (Landscaoe Architecture) பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -
கட்டக்கலை பற்றி அறிந்த அளவு பொதுவாக நிலவடிமைப்புக் கலை (Landscaoe Architecture) பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை. உண்மையில் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலையுடன் பின்னிப் பிணைந்த இன்னுமொரு கலைதான் நிலவடிவமைப்புக் கலை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சரித்திரச் சின்னங்கள் நிலவடிவமைப்புக் கலை எவ்வளவுதூரம் நகர அமைப்பில் முக்கிய இடத்தை வகித்தது என்பதை உணர்த்தும் சான்றுகள். உதாரணத்துக்குச் சிகிரியா நகர அமைப்பில் நிலவடிவமைப்புக் கலையின் பங்களிப்பு வெளிப்படை. இது போல் பழமை வாய்ந்த விகாரைகள், அரச முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள், ஆலயங்கள் இவற்றிலெல்லாம் நிலவடிவமைப்புக் கலையின் தாக்கத்தைக் காணலாம். இன்று இத்துறை ஒரு பட்டப்படிப்பாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கபப்ட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் நிலவடிவமைப்புக் கலையில் முன்னோடிகளில் ஒருவரான திருமதி ஹெஸ்ட்ர பஸ்நாயக்க பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வதே இப்பதிவின் நோக்கம். இவரைப்பற்றி அறிவதற்கு மிகவும் உதவியாகவிருந்தது 'வீக்கண்ட்' பத்திரிகையின் *4.1.982 பதிப்பில் வ் "FLORA & FAUNA WILL BEAUTIFY NEW CAPITAL" என்னும் தலைப்பில் எழுதிய ஜெனிஃபர் ஹென்ரிகஸ் ( Jennifer Henricus) கட்டுரை உதவுகின்றது. இக்கட்டுரை அக்காலகட்டத்தில் புதிதாக கோட்டேயில் (ஜயவர்த்தன்புர) திறக்கப்படவிருந்த புதிய பாராளுமன்றத்துக்காக இவர் வடிவமைத்திருந்த நிலவடிவமைப்புக் கலைத்திட்டம் பற்றி விபரிக்கின்றது. அப்போது இவர் நகர அபிவிருத்தி அதிகாரசபையில் பிரதம நிலவடிவமைப்புக் கலைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். இவர் தன் உதவியாளர்களுடன் இணைந்து உருவாக்கிய புதிய பாராளுமன்ற நிலவடிவமைக்கலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதிப்பங்காளர்களை நாடி நிற்பதை மேற்படி கட்டுரை விபரிக்கின்றது. இத்திட்டம் எவ்வளவுதூரம் வெற்றியடைந்தது என்பது தெரியவில்லை. அது பற்றி மேலதிகத்தகவல்களை அறிந்தவர்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இக்கட்டுரை ஹெஸ்டர் பஸ்நாயக்க அவர்களின் நிலவடிவமைப்புக் கலைச் சிந்தனைகள் பற்றிச் சுருக்கமான ஆனால் முக்கியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. மேற்படி புதிய பாராளுமன்றத்துக்கான் நிலவடிமைப்பு அவரது நிலவடிமைப்புக் கலைச்சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாகவுள்ளது. அவர் தனது புதிய பாராளுமன்றத்துக்கான வடிவமைப்பை இரு கோணங்களில் அணுகியுள்ளார். புதிய பாராளுமன்றத்துக்கான நிலவடிவமைப்பு. அடுத்தது புதிய தலைநகர் ஶ்ரீ ஜெயவர்ததனபுரவுக்கான நில வடிவமைப்பு.
இவ்வடிவமைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள தாவரங்களைப்பொறுத்தவரையில் மண் வாசனையைத் தக்கவைக்க வேண்டுமென்பதுஅவரது பிரதான நோக்கமாகவிருந்ததை அறிய முடிகின்றது. அதாவது பாராளுமன்றம் அமைந்துள்ள இயற்கைச் சூழலுக்கு ஒத்திசைவாக அமையும் வண்ணம், உள்ளூர் மரங்கள் (Trees), புதர்கள் (Shrubs) மற்றும் தரை விரிப்புகளைப் (Groundcovers) பயன்படுத்துவது அவரது நோக்கங்களில் முக்கியமாகவிருந்தது. புதிய பாராளுமன்றத்தை வடிவமைத்த கட்டக்கலைஞர் ஜெஃப்ரி பாவாவின் 'வெப்பமண்டல நவீனத்துவ'கட்டக்கலைக் கோட்பாட்டுடன் நன்கு பொருந்திப்போகும் வகையில் ஹெஸ்டர் பஸ்நாயக்காவின் நிலவடிமைப்புக் கலைச் சிந்தனைகள் அமைந்துள்ளதை அவரது புதிய பாராளுமன்றத்துக்கான நிலவடிமைப்பு வெளிப்படுத்துகின்றது.
அத்துடன் ஜெயவர்த்தனபுர நகரை அழகிய 'தோட்ட நகராக' (Garden City) உருமாற்றும் வகையில் அவரது நிலவடிவமைப்புத் திட்டம் அமைந்திருந்தது. நகரின் பலவகை மரங்களுடன் கூடிய சாலைகள் தனித்துவம் மிக்க வகையில் விளங்குவதை உறுதி செய்யும் வகையில் வெவ்வேறு வகைப்பூக்கள் பூக்கும் மரங்களை அவர் தேர்வு செய்திருந்தார். பொதுப்பூங்கா, மரங்களின் நிழல் படர்ந்த நடைபாதைகளுடன் கூடிய வீதிகள், சதுக்கம் போன்றவற்றை 'தோட்ட நகரம்' உள்ளடக்கியிருந்தது.
நகர் அழகாக இருப்பதுடன் , அதன் பராமரிப்புச் செலவைக் குறைக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். இயற்கையுடன் ஒன்றிணைந்த 'தோட்ட நகரம்' ஹெஸ்டர் பசநாயக்காவின் நோக்கமாகவிருந்தது. அத்துடன் மரக்கன்றுகளை வழங்குவதற்கான 'நர்சரி'யையும் அவர் தனது வடிவமைப்பில் கவனத்திலெடுத்திருந்தார். அத்துடன் முதல் வருடத்தில் 10,000 மரங்களை நடும் திட்டத்தையும் அவரது மேற்படி நிலவடிவமைப்பு உள்ளடக்கியிருந்தது. ஆனால் அது சவால் என்றும், அதற்கான நிதிப்பங்களிப்பு அவசியமாகவிருந்தது என்பதையும் மேற்படி கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது.
நிலவடிமைப்புக்கலை, புதிய பாராளுமன்றம், மற்றும் நகருக்கான நிலவடிவமைப்புக் கலை , நிலவடிவமைப்புக் கலைஞர் ஹெஸ்ட்ர் பஸ்நாயக்க பற்றிய தகவல்களைத் தரும் முக்கியமான ஆவணமாகத்திகழ்கின்றது ஜெனிஃபர் ஹென்ரிகஸ் ( Jennifer Henricus) எழுதிய "FLORA & FAUNA WILL BEAUTIFY NEW CAPITAL" என்னும் இக்கட்டுரை. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
முகநூலிலும் சம்பாதிக்கலாம்!
நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது. முகநூல் உண்மையில் பொருள...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...

No comments:
Post a Comment