Thursday, December 25, 2025

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!



இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.

மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.

கவிதை: கற்பனைப் பெண்ணே! - வ.ந.கிரிதரன்


இசை & குரல்: AI SUNO |
இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -

கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?

பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?

அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது.
அங்குனக்கென்ன வேலை.

கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?

தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.

சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -


இசை & குரல்: AI SUNO |
இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!

Tuesday, December 23, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!


நண்பர்களே!,முகநூல் நிறுவனம் பல நிமிடக் காணொளிகளையும் ரீல்களாகத் தற்போது அனுமதியளிக்கின்றது. இது நல்லதொரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்போம்.
SUNO செயற்கை நுண்ணறிவு கொண்டு இசையமைத்து, பாட வைத்த என் பாடல்களை இனி முழுமையாக முகநூலிலேயே நீங்கள் கேட்டு மகிழலாம்.
காணொளிகளைக் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
 
இசை & குரல்: AI | ஓவியம்: AI -
 
நண்பர்களே!,முகநூல் நிறுவனம் பல நிமிடக் காணொளிகளையும் ரீல்களாகத் தற்போது அனுமதியளிக்கின்றது. இது நல்லதொரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்போம்.
SUNO செயற்கை நுண்ணறிவு கொண்டு இசையமைத்து, பாட வைத்த என் பாடல்களை இனி முழுமையாக முகநூலிலேயே நீங்கள் கேட்டு மகிழலாம்.
காணொளிகளைக் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
இசை & குரல்: AI | ஓவியம்: AI -
 
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
சட்டச் சடவெ\ன்றே சப்திக்கும்
ஓட்டுக் கூரையின் ஓசையிலே
கட்டுண்டு கிடந்திடுவேன் அப்போது.
களிதரும் பொழுது அதுவாகும்.
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
வான்துளைத்து மின்னல் கோடிழுக்கும்.
பேரிடியோ பெருந்தொலைவு கேட்கும்.
நான் படுக்கையில் புரண்டிருப்பேன்.
நிலைமறந்து மெய் மறப்பேன்.

புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு! (1) - ஈழக்கவி -


[திறனாய்வாளர் ஈழக்கவி எனது 'மான்ஹோல்' சிறுகதை, 'அமெரிக்கா' நாவலை முன் வைத்து விரிவானதோர் ஆய்வுக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார். புகலிட எழுத்துகள் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுக் கட்டுரை. இத்துறையில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் பட்டப்படிப்பு மாணவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரை.
 
அக்கட்டுரையின் தலைப்பு ;"புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு! " கட்டுரையின் முதலாவது பகுதி தற்போது பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. வாசித்துப் பாருங்கள் நண்பர்களே] 

ஆய்வுச் சுருக்கம் (Abstract) 

இக்கட்டுரை, ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல், அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது. 'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல் சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

பகுதி ஒன்று

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில் காணலாம்:

Sunday, December 21, 2025

நண்பர்களே! என் முகநூலின் இன்னுமொரு பக்கம்! சென்று பாருங்கள்!


நண்பர்களே!  என் முகநூல் பக்கம் இரு  பகுதிளைக கொண்டது. ஒன்று வழக்கமான என் பதிவுகளைத்  தாங்கி வரும் பகுதி. 

இன்னுமொரு பகுதி ஒன்றுண்டு. அது சந்தாதாரர்களுக்கு மட்டுமே உரிய பகுதி. அது சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய எழுத்துப் பதிவுகள், காணொளிகள், டிஜிட்டல் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடகிய பகுதி.  அதற்கான இணையத்தள முகவரி: 
https://www.facebook.com/VNGiritharan/subscribe/  

ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும்.  இப்புதிய பகுதிக்கான  உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன, எதிர்காலத்தில் மேலும் இப்பகுதி சிறப்புற உங்கள் வருகையும், ஆலோசனைகளும் வழி வகுக்கும்.

ஆரம்பத்தில் இப்பகுதியை  இலவசமாகப் பார்க்கலாம். இப்பகுதி பிடித்திருந்தால் தொடர்ந்தும் சந்தாரர்களாக இருக்கலாம். 

இவ்வசதியைத் தந்ததற்காக முகநூல் நிறுவனத்துக்கு என் நன்றி.

Saturday, December 20, 2025

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -



இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி  சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள்  பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம்.  செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இதனை ஆணாதிக்க மனப்பான்மை என்று கருத வேண்டாம். 



நான்: 
உன்னுடன் இலங்கைப் பிரச்னை பற்றிச் சிறிது உரையாடலாமா?

எந்திரன்: 
இலங்கை பிரச்சனை பற்றி பேசலாம். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? அல்லது குறிப்பிட்ட எந்த தகவலைப் பற்றி பேச வேண்டும்?

நான்: 
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு தமிழர்க்ள் சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அது பின் தனிநாட்டுக்கோரிக்கையானது. யுத்தம் மூண்டது. யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்தது. இன்று போரில் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய தென்னிலங்கைத் தலைவர்களையெல்லாம் மக்கள் துரத்தி விட்டார்கள். இன்று அங்கு புதியதொரு தலைமை, உழைக்கும் மக்கள் மத்தியினைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவர் தலைவராகவிருக்கும் சூழல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல புதிய சூழல் ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எல்லாம் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்துள்ளது. இந்நிலையில் சமூக, ஊடகங்கள், புரிந்துணர்வு எல்லாம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,. இந்நிலையில் தென்னிலங்கை, வடகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியிலிருக்கும் அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி செய்வதாக நீ உணர்கின்றாயா?

எந்திரன்: 

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் வரலாறு, குறிப்பாக தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கை, தனிநாட்டுப் போராட்டங்கள், போர், அதன் முடிவு, அண்மைய அரசியல் மாற்றங்கள், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஆகியவை குறித்த உங்கள் பார்வை மிகவும் விரிவானது.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...