Wednesday, January 14, 2026
இனிய பொங்கல் வாழ்த்துகள்!
அனைவருக்கும் அடியேனின்
அன்புப் பொங்கல் வாழ்த்துகள்!
அகிலத்தின் ஆணிவேர்
அயராதுழைக்கும் கதிர்தன் ஒளி.
அகிலத்தின் உயிர்நாடி உழவு.
காக்கும் கதிருக்கும்,
கடுமுழைப்பால் எம்மிருப்பின்
காரணகர்த்தாக்களான
உழவருக்கும், அவர்க்கு
உதவிடும் ஆவினத்துக்கும்
நாம் மானுடர் ஆற்றும்
நன்றிக் கடனே
நம் தமிழர் பொங்கல்
நன்னாளாம்! இன்னாளாம்!
பொங்கட்டும் இன்பம் எங்கும்.
தங்கட்டும் மங்கலம் எங்கும்.
பொங்கலோ! பொங்கல்!
பொங்கலோ! பொங்கல்!
* டிஜிட்டல் ஓவியம் கூகுள் நனோ பனானா வழியாக வ்நகி.
Tuesday, January 13, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!
வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!
இசை & குரல் - SUNO AI ஓவியம் - Google AI
[வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]
நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.
நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என்
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய்
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!
நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.
Monday, January 12, 2026
வ.ந.கிரிதரன் பாடல் : கனடாத் தமிழர்!
வ.ந.கிரிதரன் பாடல் : கனடாத் தமிழர்!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: Google Nano Banana AI
[வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]
கனடா பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன். வந்தேன்.
இட்லி, தோசை,ம் இடியாப்பம் எல்லாம்
இல்லாமல் போகுமோ என்றே பயந்திருந்தேன்.
பிள்ளையார் கோயில் , துர்க்கை அம்மன் கோயில்
ஐயப்பன் கோயில் கந்தசாமி கோயில்
இல்லாமல் இருக்குமோ என்று பயந்திருந்தேன்.
இங்கே எல்லாமே இருக்கக் கண்டேன்.
கனடா பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன். வந்தேன்.
வ.ந.கிரிதரன் பாடல் : கனடாவில் கிட்டார் அடிக்கும் கலைஞன் நானே
வ.ந.கிரிதரன் பாடல் : கனடாவில் கிட்டார் அடிக்கும் கலைஞன் நானே
இசை & குரல்: SUNO AI ஓவியம்: Google Nano Banana AI
[வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]
கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.
நண்பன் சொன்னான் கிட்டார் அடிக்க விருப்பமா என்று.
நண்பா யாருக்குத்தான் விருப்பம் இல்லை என்றேண்.
அப்படியென்றால் உனக்கு ஒரு வேலை ரெடி என்றான்.
எப்படியென்றாலும் வேலை கிடைத்தால் போதுமென்றேன்.
கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.
Sunday, January 11, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!
[வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி]
வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
மண்ணை விட்டுப் பிரிந்த போது
எண்ணத்தில் பதிந்த நினைவுகள் விரிய
மீண்டும் மண்ணைப் பார்க்கும் ஆவலில்
எண்ணப் பறவைகள் சிறகடித்துப் பறந்தன.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
என்னுடன் படித்த , என்னுடன் திரிந்த
என்னினிய நண்பர்கள் எங்கே. எங்கே.
என்னுடன் திரிந்த நண்பர் எவரும்
எங்குமற்ற மண்ணைக் கண்டேன்.
Saturday, January 10, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!
வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.
ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.
பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.
நடந்தவற்றை ஒதுக்கிக் கடப்போம்.
நடப்பவற்றை துதித்து ஏற்போம்.
நடப்பவை எல்லாமே இனிதாய்
நடக்கும் என்பதை அறிவோம்.
வ.ந.கிரிதரன் பாடல்; பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
வ.ந.கிரிதரன் பாடல்; பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
இசை & குரல் - Suno AI ஓவியம் - AI
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம் இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
வாயுக் குமிழ் போன்றது நம் வாழ்வு.
ஓயும் வரையும் உணராமல் ஓடுகின்றோம்.
சாயும் வரையில் சரிபிழை தெரிவதில்லை.
மாயும் வரையில் சிந்திக்காமல் வாழுகின்றோம்.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
மண்ணைப் பங்கு போட ஆசை.
பொன்னைப் பெருக்கப் பேர் ஆசை.
ஆசைகளை பூர்த்தி செய்ய ஆடுகின்றோம்.
அல்லும் பகலும் ஓயாது பறக்கின்றோம்.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
சமத்துவம் அற்ற உலகம் இது.
சமநீதி அற்ற உலகம் இது.
பகுத்து அறிவோம் மேலும் உயர்வோம்
வகுத்து வைப்போம் நல்லதோர் அமைப்பை.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்
*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.
V.N. Giritharan Songs - https://www.youtube.com/@girinav1 - My songs with music and vocals by Artificial Intelligence. Listen and enjoy. Share your thoughts. If you like the songs, please don't forget to subscribe to the 'V.N. Giritharan Songs' channel. Your support will greatly help in the growth of this channel. Thank you.
***********************************************************
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
.png)
