Monday, January 12, 2026

வ.ந.கிரிதரன் பாடல் : கனடாத் தமிழர்!


வ.ந.கிரிதரன் பாடல் : கனடாத் தமிழர்!

இசை &  குரல்: SUNO AI  ஓவியம்: Google Nano Banana AI

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

கனடா  பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன்.  வந்தேன்.

இட்லி, தோசை,ம் இடியாப்பம் எல்லாம்
இல்லாமல் போகுமோ என்றே பயந்திருந்தேன்.
பிள்ளையார் கோயில் , துர்க்கை அம்மன் கோயில்
ஐயப்பன் கோயில்  கந்தசாமி கோயில் 
இல்லாமல் இருக்குமோ என்று பயந்திருந்தேன்.
இங்கே எல்லாமே இருக்கக் கண்டேன்.

கனடா  பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன்.  வந்தேன்.தமிழர் திருவிழா, தமிழர் தெருவிழா
தமிழர் சுப்பர் மார்க்கட், தமிழர் உணவகம்
எல்லாமே கண்டேன். இன்பமே கொண்டேன்.
ஊரிலுள்ள எல்லாவற்றையும் கொண்டு வந்தார்.
உள்ள பிரிவுகள்  எல்லாம் கொண்டு வந்தார்.
அள்ளும் பண ஆசையில் மிதந்தார்.

கனடா  பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன்.  வந்தேன்.

காலையில் வேலை. மாலையில் வேலை.
நள்ளிரவில் வேலை. சாமத்துப் பேய்களாக வாழ்க்கை.
பில்களில் வாழ்க்கை தொடருது இங்கே.
வார இறுதியில் பார்த்தால்  உண்டு.
சொர்க்கபுரியில் வாழ்கின்றார் இங்கே.
 மயங்கிக் கிடப்பார்கள் ஊரில் அங்கே.

கனடா  பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன்.  வந்தேன்.

இலங்கைக்குப் போக மாட்டோம்.
உள்ள  காணிகளை விடவே  மாட்டோம்.
சொந்தத்தை  இழந்தாலும் இழப்போம் ஆனால்
சொத்துக்களை  ஒருபோதும் இழக்க மாட்டோம்.
பார்ட்டியும், கூத்துமாக வாழ்க்கை இங்கே.
தொட்டுக்கொள்ள ஊறுகாயாக  உரிமைக் கோசங்கள்.
சங்கம் வளர்த்த  தமிழர் அல்லவா.

கனடா  பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன்.  வந்தேன்.

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

வ.ந.கிரிதரன் பாடல்:  நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்! இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI [வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.yo...

பிரபலமான பதிவுகள்