Wednesday, January 7, 2026

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் , திராவிடம் தெக்கணம் பற்றி...


"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! "

இப்பாடல்  மனோன்மணீயம் பெ. சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் காப்பியத்தில் வரும் தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் பாயிரத்தில் வரும் வரிகள்.  இப்பாடல் தெளிவாகத் தென்னிந்தியாவைத் தெக்கணம் என்றும் , தமிழ் நாட்டைத்  திராவிட நல்  திருநாடு என்றும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இதனால்தான் 1914ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்திலுள்ள தமிழ்ச்சங்கங்கள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்தாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. 

அதனால்தான் தமிழ் மொழிக்காக, அதன் வளர்சசிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்,திராவிடக் கழகத்தினர் திராவிடம் என்னும் சொல்லைத்  தமிழகத்தைக் குறிக்கப்பாவித்தனர். திராவிடக் கழகத்தினர் திராவிட் மொழி என்று குறிப்பிட்டது தமிழை. திராவிட நாடு என்று குறிப்பிட்டது தமிழ் நாட்டை.

அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது இப்பாடலைத்தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக்க வேண்டுமென்ற கோரிக்கை பலமாக எழுந்தது. அதை அவர் நிறைவேற்றுவதற்குள் அறிஞர் அண்ணா மறைந்து விட்டார். அதனால்தான் கலைஞர் அதன் பின் ஆட்சிக்கு வந்ததும் அக்கோரிக்கையை நிறைவேற்றினார்.இந்த வரலாறு தெரியாத  ஒரு கூட்டம் இன்று திராவிடக் கட்சிகளின் தாக்கத்தைத் தமிழகத்திலிருந்து அகற்றுவதற்காக திராவிடம் என்பது தமிழ் அல்ல. தெலுங்கனின் சூழ்ச்சி என்றெல்லாம் புதுக்கதையாடல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கு நடிகர் விஜய் இன்னும் பலியாகவில்லையென்பதைத்தான் அவர் மேடைகளில் பெரியாரின் படங்களை வைப்பதிலிருந்து அறிய முடிகின்றது. இந்த வகையில் அவர் கட்சியின் பெயரில் உள்ள தமிழகம் என்பதும் திராவிடம் என்பதன் இன்னுமொரு பெயர்தான்.  ஆக திமுகவோ அல்லது தமிழக வெற்றிக்கழகமோ திராவிடக் கட்சிகள்தாம்.  இன்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தில் குடும்ப அரசியலில் ஆதிக்கம் இருப்பதால், அவர் திராவிடம் என்னும் சொல்லுக்குப் பதிலாகத் தமிழகம் என்னும் சொல்லைத்  தேர்ந்தெடுத்திருப்பதாகவே தெரிகின்றது.

No comments:

காலத்தால் அழியாத கானம்: "உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே"

'பாக்தாத் திருடன்' திரைப்படத்துக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. எம்ஜிஆரும், வையந்திமாலாவும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் என்ற முக்க...

பிரபலமான பதிவுகள்