Sunday, January 25, 2026

அலெக்ஸ் பிரிட்டியின் மானுட நேயத்திற்காகத் தலை வணங்குவோம்! - வ.ந.கி -


மின்னியாபொலிஸ் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடிவரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. அவரது தலைமையிலான ICE குண்டர்களின் அட்டகாசம் தொடர்கிறது. எவ்வித மானுட நேயமுமற்று பெண்களை, முதியவர்களைம் குழந்தைகளை அவர்கள் அவமானப்படுத்தும் வகையில் கைது செய்வதும், அவர்கள் மேல் தேவைக்கு அதிகமான அளவில் பலாத்காரம் புரிவதும் தொடர்கிறது. அவ்வகையில் பெண்ணொருவரை மேற்படி ஐஸ் அமைப்பின் குண்டர்களில் ஒருவன் வீதியோரத்தில் தள்ளி விழுத்துகிறான். அவனைத்தொடர்ந்து வேட்டை நாய்களென மேலும் பல ஐஸ் குண்டர்கள் உதவிக்கு ஓடி வருகின்றார்கள். அந்த அப்பாவிப்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக வெள்ளையினத்தைச் சேர்ந்த ஆண் தாதியாகப் பணி புரியும் அலெக்ஸ் பிரிட்டி ஓடி வருகின்றார்,. அவர் தன் இடுப்பில் சட்டபூர்வமான துப்பாக்கியை வைத்திருந்தாலும், அவர் அதனைப் பாவிக்க எச்சந்தர்ப்பத்திலும் முயற்சி செய்யவில்லை. ஐஸ் குண்டர்களில் ஒருவன் அதை கண்டு எடுத்ததும், அலெக்ஸ் பிரிட்டி சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
அலெக்ஸ் பிரிட்டியின் மானுட நேயத்திற்காகத்  தலை வணங்குவோம்.

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனான வழி வநகி]

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...

பிரபலமான பதிவுகள்