'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, January 3, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!
இசை & குரல் - SUNO AI ஓவியம் - Google AI
பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன்
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
காணும் திசையெல்லாம்
'காங்ரீட்'காடுகள்.
'காங்ரீட்' காடுகள்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
'காங்ரீட்' சுவர்கள்!கனல் உதிர்க்கும் 'காங்ரீட்! மரங்கள்
சீமெந்து சிரிக்கும் நடைபாதைகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
தூண்களின் அரவணைப்பில்
துவண்டு கிடக்கும் காலவெளிகள்.
செயற்கையின் தாக்கங்கள்.
எங்கும்
செயலற்ற இயற்கையின் தேக்கங்கள்.
தலைகவிழ்ந்து தண் நிழலால்
அரவணைக்கும் விருட்சப் பெண்கள் எங்கே?
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.
இயற்கையின் தாக்கத்தினுள்
இலங்கிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்த வாழ்க்கைச்
சக்கரங்கள்.
இனிய
அதிகாலைப் பொழுதுகளா அவை.
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா அவை.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
விஞ்ஞானத்தின் இறுமாப்பில்
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக்கிடக்கும் மானுடத்தின்
நெஞ்சினிலோ.......
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?
விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்! போர்! போர்!
ஆ....
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?
ஆ..அந்த
அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!
இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!
எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்.
***********************************************************
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!
வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே! இசை & குரல் - SUNO AI ஓவியம் - Google AI பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் 'காங்ரீட்''காங்...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
No comments:
Post a Comment