Wednesday, January 28, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.


வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.


இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

எண்ணங்கள் இல்லையென்றால் என்ன உண்டு?
எண்ணங்கள் எம்மை வழிநடத்தும் பாதைகள்.
எண்ணங்களை மீறி ஒன்றும் இல்லையா புறத்தே.
எண்ணங்களே எம் வாழ்வின் ஆதாரங்கள்.

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.பால்யப் பருவத்து எண்ணங்கள் இன்றும் 
பதின்மப் பருவத்து எண்ணங்கள் இன்றும்
இளமைப் பருவத்து எண்ணங்கள் இன்றும்
இருப்பதால் அன்றோ இனிக்கிறது இருப்பு.

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

தொடரும் எண்ணங்களால் தொடரும் வாழ்க்கை.
தொடரும் எண்ணங்களின் பரிணாம வளர்ச்சியில்
தொழில் நுட்பம் பிறக்கும், சிறக்கும்.
எழில்மிக்க நகர்கள் மலரும் எங்கும்.

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

அன்னையின் நினைவுகள் , எந்தையின் நினைவுகள்
இன்னமும் நினைவிலோடும் காதலின் நினைவுகள்
என்னில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்.
என்னிருப்பு தொடர்வதும்  எண்ணங்களினால் தானே.

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...

பிரபலமான பதிவுகள்