இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினை பெற்றவர் பாலு மகேந்திரா! - வ.ந.கி -
இந்தியச் சினிமா உலகில் இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் மூன்று தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. ஆறு தடவைகள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபெயர் விருதினைப் பெற்றவர். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பொழுது இவர் யாரென்று அறிந்திருப்பீர்கள். ஆம்! இவர்தான் பாலு மகேந்திரா.
மேலும் கேரள, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகள், பிலிம்ஃபெயர் விருதுகள், நந்தி விருதுகள் பெற்றிருக்கின்றார்.
இவர் தனது இளமைப்பருவத்தில் இலங்கையில் வெளியான தேனருவி சஞ்சிகையின் உதவி
ஆசிரியராகவும் இருந்ததுடன் அதில் வடிகால் என்னும் சிறுகதையொன்றினையும்
எழுதியிருக்கின்றார். அச்சஞ்சிகைக்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/171/17067/17067.pdf அப்பொழுது அவர் பா.மகேந்திரன் என்னும் பெயரில் அறியப்பட்டிருந்தார்.
எழுத்தாளர்
அஜயன் பாலா தற்போது பாலு மகேந்திராவின் வாழ்க்கை வரலாறு பற்றி
எழுதிக்கொண்டிருக்கின்றார். பாலு மகேந்திரா பற்றி நன்கறிந்தவர்கள்
யாருமிருந்தால் உங்களைப்பற்றி அறியத்தாருங்கள். அஜயன்பாலாவின் முயற்சிக்கு
நீங்கள் உதவக்கூடும். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா செயற்கை நுண்ணறிவு.
* இவரைப்பற்றிய தகவல்கள் விக்கிபீடியாவின் ஆங்கிலப் பக்கத்தை ஆதாரமாகக் கொண்டவை. தவறுகள் இருப்பின் அறியத்தாருங்கள்.
No comments:
Post a Comment