Saturday, January 3, 2026

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

ஆதி மானுடர் அண்ணாந்து  பார்த்த  இந்தநிலா
அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.

காதலுக்குத் தூது செல்லும் இந்தநிலா.
கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தநிலா.
சிந்தையைக் கொள்ளை கொள்ளும் இந்தநிலா.
எம்முன்னோர் களித்துக் கிடந்த இந்தநிலா.

உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.

*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1  -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்.

***********************************************************

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே! இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன்  'காங்ரீட்''காங்...

பிரபலமான பதிவுகள்