அவ்விதம் ஒடுங்கிய தமிழர் பேசும் மொழி இருக்கும் பிரதேசங்களுக்கேற்ப வேறுபாட்டுடன் விளங்கியது. இன்று கூட கோவை, மதுரை, தஞ்சாவூர்த் தமிழ் வித்தியாசமாக் இருக்குதல்லவா., அதுபோல். இவ்வேறுபாட்டைப் பாவித்து வடக்கில் திராவிடரை அடக்கிய ஆரியர் , தெற்கிலும் தம் மொழி, சமயம் இவற்றைப்பாவித்துத் தமிழைக் கன்னடம், தெலுங்கு, மலையாளமாக மேலும் பிரித்தனர், இது ஆரியர் தமிழைப்பலவீனப்படுத்தச் செய்தது.
இப்பொழுது சுதந்திரம் அடைந்த பிறகு தெற்கு மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் அவர்களால் கடந்த 58 வருடங்களாகக் க் காலூன்ற முடியவில்லை. இப்பொழுது என்ன செய்கின்றார்கள் என்றால் தமிழகத் தமிழரை அவன் தெலுங்கன், இவன் மலையாளத்தான் என்று பிரித்து , அப்பிரிவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்கின்றனர். இதற்குப் பலியானவர்களை நான் உண்மையில் ஆரியரின் கைக்கூலிகள் என்றே கூறுவேன்.


No comments:
Post a Comment