Tuesday, January 20, 2026

யு டியூப் ஆய்வாளர்கள்!


இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்களே   சிறந்த ஊடகவியலாளர்களாக, ஆய்வாளர்களாக இருந்தார்கள்.  யாரும் ஊடகவியலாளர்களாம், யாரும் எழுத்தாளர்களாகலாம், யாரும் சஞ்சிகைகள் நடத்தலாம், யாரும் எழுதலாம், நடிக்கலாம் என்னும் நிலையினைச் சமூக ஊடகங்கள் உருவாக்கின. சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கலாம் என்னும் நிலை வந்ததும், சம்பாதிப்பதையே நோக்காகக் கொண்டு எல்லாருமே உண்மைகளைக்க குழி தோண்டிப் புதைத்து விட்டு, பரபரப்பினைத் தரும், உணர்வினைத் தூண்டி விடும், செய்திகளை , உண்மையினைத் திரித்து  எழுதவும், பேசவும் வழி வகுத்தது. அதிகமானவர்களைத் தம்மிடம் அழைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எல்லாரும் இயங்கத்தொடங்கினார்கள்.  இது சமூக ஊடகங்களால் உருவான எதிர்மறை அம்சங்களில் ஒன்று.பொதுவாகப்  பாரம்பரிய ஆய்வாளர்கள் நிதானமாக, தம் தேடல்களினால் பெற்றுக்கொண்ட சான்றுகளின் அடிப்படையில், எவ்விதத்  தனிநபர் தாக்குதல்களும் அற்று தம் தர்க்கங்களை முன் வைப்பார்கள். பொழுது போக்குக்காகவோ அல்லது தம் யு டியூப் சானலுக்கு அல்லது முகநூற் பக்கங்களுக்குப் பலரை அழைப்பதற்காக இவர்கள் ஆய்வுகள் செய்வதில்லை. இவர்கள் ஆனையொன்றை பார்த்த குருடர்களாக  இருப்பதில்லை. ஆனையை முழுமையாகப் பார்ப்பதற்கு முயற்சி செய்பவர்கள். 

மாறாக யு டியூப் ஆய்வாளர்களில் பலர் ஆனை பார்த்த குருடர்கள். ஆனையின் ஒரு பக்கத்தைப் பார்த்து விட்டு, அதைச் சரியென்று வாதிடுவதற்காகத் தனிநபர் தாக்குதல்களில் இறங்கி விடுவார்கள். கீழ்த்தரமாகத் தாக்கத்தொடங்குவார்கள். 

No comments:

யு டியூப் ஆய்வாளர்கள்!

இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்க...

பிரபலமான பதிவுகள்