Thursday, January 8, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!


வ.ந.கிரிதரனின் பாடல்  -கல்லுண்டாய் நினைவுகள்!
இசை & பாடல் - SUNO AI   ஓவியம் - Google AI


அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

நகருக்குப் படையெடுப்பர் தொழிலாளர்.
நானும் கூடவே சைக்கிளில் செல்வேன்.
அராலி வடக்கில் நான் வசித்தேன்.
அக்கால நினைவுகள் விரிகின்றன.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

அராலிப் பாலத்தில் இறால் பிடிப்பர்
அதிகாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்.
அங்குதான் வழுக்கியாறு கடலுடன் சங்கமிக்கும்.
அதுவோர் அகத்தின் இனிய நினைவு.;

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தொலைவில் நவாலி ம்ணற் குன்றுகள்.
தவமியற்றும் துறவிகள் போலிருக்கும்.
காற்றிலாடும் பசும் வயல்கள்.
கிளிகளும் கூட்டமாகப் பறக்கும்.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.கல்லுண்டாய் வைரவர் தாண்டிச் செல்வேன்.
காக்கைதீவு கண் முன்னே விரியும்.
காலையில்  மீன்சந்தை  உயிருடன் விளங்கும்.
கண்களில் காட்சி இன்னும் தெரிகிறது.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

கடலட்டை சூளைகளில் அவியும். அவிந்ததைக். 
காயப் போட்டிருப்பர் கடற் தொழிலாளர்.
கடற் பறவைகளோ நிறைந்து கிடக்கும்.
காட்சியை மறக்கத்தான் முடியுமா?

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தொடர்ந்து பயணிப்பேன். நாவாந்துறை தெரியும்.
கடந்து சென்றால் பொம்மைவெளிக் குடியேற்றம்.
முஸ்லிம் மக்கள் வாழும்  குடியேற்றம்.
மறக்க முடியாத காட்சிகள் அல்லவா.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. 

V.N. Giritharan Songs - https://www.youtube.com/@girinav1 - My songs with music and vocals by Artificial Intelligence. Listen and enjoy. Share your thoughts. If you like the songs, please don't forget to subscribe to the 'V.N. Giritharan Songs' channel. Your support will greatly help in the growth of this channel. Thank you.
***********************************************************

No comments:

வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!

வ.ந.கிரிதரனின் பாடல்  -கல்லுண்டாய் நினைவுகள்! இசை & பாடல் - SUNO AI   ஓவியம் - Google AI அதிகாலைகளில் , அந்திவேளைகளில்  அன்று கல்லுண்டாய...

பிரபலமான பதிவுகள்