Sunday, January 25, 2026

காலத்தால் அழியாத கானம்: 'நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'


'என் அண்ணன்' திரைப்படத்தில் இடம்  பெற்றுள்ள , கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கே.வி.மகாதேவன் இசையில் ஒலிக்கும் இனியதொரு காலத்தால் அழியாத கானமிது. இத்திரைப்படத்தை முதல் நாள் காலைக் காட்சியாக யாழ் வெலிங்டன் திரையரங்கில் பார்த்த நினைவுகள் படமாக விரிகின்றன. 

கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர், கே.வி.மகாதேவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்தாம். பொதுவாக அவரது இவ்விதமான பாடல்கள் டி.எம்.எஸ் &  பி.சுசீலா குரலில் ஒலிப்பவை. ஆனால் இது டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கின்றது.  இதுவும் சிறப்பாகத்தானுள்ளது. பாடலின் இறுதிச் சரணத்தில் வரும் ஜெயலலிதாவின் நடன அசைவுகள் இப்பாடலின் சிறப்பான அம்சம். ஜெயலலிதா சிறந்த நர்த்தகி. இது போன்ற அவரது நடனத்திறமையினை வெளிப்படுத்தும் காட்சிகளை உள்ளடகிய பாடல்கள் பொதுவாக எனக்குப் பிடித்தவை. அவர் அறுபதுகளில் தமிழகத்தில் 'காவிரி தந்த கலைச்செல்வி' என்னும் நடன நிகழ்ச்சியைப் பல மேடைகளில் நடத்தியவர். மிகுந்த வரவேறபப் பெற்ற நிகழ்வு அது. அதனால்தான் அவர் 'கலைச்செல்வி' ஜெயலலிதா என்றும் அழைக்கப்பட்டார். அந்நடன நிகழ்வுக் காட்சி யு டியூப்பில் கிடைக்குமா என்று அவ்வப்போது தேடிப் பார்ப்பதுண்டு. இதுவரையில் அதற்கான் அதிர்ஷ்ட்டம் வாய்க்கவில்லை.

https://www.youtube.com/watch?v=9IKQLJPzyvs

கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் முழுமையாக:


நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
தாமரை பூவிலே உந்தன்  இதழ்கள் தந்ததே சிவப்போ
மீன்களின்  அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ
தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே  சிவப்போ
மீன்களின்  அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ
இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ
இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
அந்த நதி என்ன உனைக் கேட்டு நடை போட்டதோ
இங்கு அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா என் கண்ணோ நீல நிறம்

கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ
கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா.
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...

பிரபலமான பதிவுகள்