https://www.youtube.com/watch?v=cklW1BKPgeQ
'சம்சாரம்' திரைப்படம் 1950ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படம். ஜெமினி தயாரிப்பான இத்திரைபடத்தின் இயக்குநர்களிலொருவர் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.வாசன். அடுத்தவர் சந்துரு. இத்திரைப்படத்தின் இசை - ஈமணி சுந்தர சாஸ்திரி. பாடல்களை எழுதியவர் : கொத்தமங்கலம் சுப்பு.
இத்திரைப்படத்தில் வரும் 'கட கட லொட லொட வண்டி' மிகவும் புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப்பாடல்களிலொன்று. இப்பாடலைப்பாடியிருப்பவர்கள் ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கி.
பின்னாளின் புகழ்பெற்ற 'பெரிய இடத்துப்பெண்'ணில் வரும் 'பாரப்பா பழநியப்பா', 'மாட்டுக்காரவேலன்' திரைப்படத்தில் வரும் 'பட்டிக்காடா பட்டணமா' மற்றும் 'சகலகலா வல்லவன்' திரைப்படப் பாடலான 'கட்டை வண்டி, கட்டை வண்டி' ஆகிய பாடல்களுக்கு மூலம் இந்தக் 'கட கட லொட வண்டிதான்'.
இப்பாடலில் மாட்டு வண்டியோட்டும் நாயகனாக வருபவர் நடிகர் ஶ்ரீராம். காரையோட்டியபடி வந்து ஶ்ரீராமைக் கிண்டலடிக்கும் நாயகி அந்நாளில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவரான குமாரி வனஜா.
இப்படத்தைப்பற்றி அப்பா அவ்வப்போது சிலாகித்துப் பேசுவார். நடிகர் ஶ்ரீராம் நல்ல நடிகர் என்றும், பட்டதாரியான நடிகர் என்றும் , இளவயதில் மறைந்து விட்டாரென்றும் கூறுவார். அவர் மூலமே இப்படம் பற்றியும், நடிகர் ஶ்ரீராம் பற்றியும் முதன் முதலில் அறிந்து கொண்டேன்.
[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் AI]
No comments:
Post a Comment