Thursday, January 1, 2026

அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!


என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்)  என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.  என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:

1. என் குருமண் காடே! 
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4.  இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!

இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன்  ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும்  மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி  யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி,  பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.இவ்வருடம் மேலும் புதிய பாடல்களுக்கான காணொளிகள் பலவற்றை வெளியிடவுள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான கருத்துகளும் நிச்சயம் உதவும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் YouTube  சானலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே! இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன்  'காங்ரீட்''காங்...

பிரபலமான பதிவுகள்