Tuesday, January 27, 2026

" ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த இசைக்குழுக்கள் பலவற்றில் பாடிப்புகழ் பெற்றவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். கண்ண்ன் - நேசம் இசைக்குழுவில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர்.  நான் அக்காலகட்டத்தில் என் பால்ய, பதின்மப் பருவத்தில் பல இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகளை ஆலயத்திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில்  நண்பர்களுடன் கேட்டு இரசித்திருக்கின்றேன்.  ஆனால் அப்போதெல்லாம் அங்கு பாடிய பெண் பாடகிகளின் பெயர்கள் நினைவிலில்லை. இவரும் பாடியிருந்திருக்கலாம். பெயர் அறியாமல் இவர் பாடலை இரசித்திருப்பேன். ஆனால் இவரது பெயரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது 'கோமாளிகள்' திரைப்படத்தில் இவர்  பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்' என்னும்  பாடல் மூலம்தான்.எழுபதுகளின் ஆரம்பக் காலகட்டத்தில் நிலவிய ஶ்ரீமா அம்மையாரின் ஆட்சியில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும்  பொருட்டு , இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் , உள்ளூரில் தயாரிக்கபப்ட்ட்  பல தமிழ்த்திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. வாடைக்காற்று,  நான் உங்கள் தோழன், கோமாளிகள் போன்றவை முக்கியமானவை. அவற்றில் எஸ்.ராமதாஸ் எழுதி வானொலி நாடகமாகப் புகழ்பெற்ற கோமாளிகள் திரைப்படமாக வெளியானபோது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பும் திருகோணமலை ஆகிய நகர்களில் 75 நாட்களைக் கடந்து ஓடிய ஒரே திரைப்படம் இதுதான்.  இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றுதான் " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்'' பாடல்.  கோமாளிகள் திரைப்படத்துக்கான வானொலி விளம்பரத்திலும் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்த பாடல். அதனால் கோமாளிகள் திரைப்படத்தை நினைத்தால் உடன் நினைவுக்கு வரும் பாடலும் இதுதான். இந்த ஒரு பாடல் மூலம் எம் நினைவில் நிலைத்து நிற்பவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். 

அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.  இவர் மறைந்த தகவலினை முகநூல் நண்பர் குருநாதன் முத்தையாவின் முகநூற் பதிவின் மூலமே அறிந்து  கொண்டேன். 

இவர் நினைவாக, கோமாளிகள் திரைப்படத்தில் இவர் பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=VkqRl9GbRQ4

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...

பிரபலமான பதிவுகள்